Monday, November 7, 2022

கிரகணங்கள் - ஒரு ஜோதிட பார்வை

ஆச்சார்யா தேவோ பவ;

நமஸ்காரம் குருஜி

நாம் அனைவரும் அறிந்தபடி சூரிய கிரகணம் 25.10.2022 நிகழ்ந்தது. சந்திர கிரகணம் 8.11.2022 அன்று மாலை 4.32 மணி முதல் 6.18 மணி வரை நடக்க இருக்கிறது. இரண்டு கிரகணங்களும் ஒரு பட்ச (15 நாட்கள்) இடைவெளியில் நடக்கிறது. பழைய நூல்களில் இப்படி இரு கிரகணங்கள் நிகழ்வு அசாதாரணமான நிகழ்வுகளையும் பதட்டமான சூழ்நிலைகளையும் போர்ச்சூழ்நிலைகளையும் ஏற்படுத்தும் என கூறுகின்றன. பொதுவாகவே கிரகணங்கள் இலையுதிர் காலங்களில் பயிர், பச்சைகளுக்கு பூச்சி தாக்கு, அழிவு, பஞ்சம், கொள்ளை நோய், போர் பதற்றம் முதலியற்றை ஏற்படுத்தும். இந்த இரு கிரகண கூட்டு ஒரு போர் விளைவதற்கான சூழ் நிலையையும், உலகளாவிய மந்த நிலையையும் (மீன்டும்) ஏற்படுத்தும். 

சர இராசிகளில் தீய, பாவ கிரகங்களின் அமர்வு போர்நிலையை வேகப்படுத்தும். தற்போதைய கோச்சாரத்தில் வக்ர செவ்வாயின் பார்வை சனிக்கு. சூரிய கிரகணம் காற்று இராசியில் சூறாவளி, புயலை ஏற்படுத்தும். வான் விபத்துகள், பயங்கரமான விபத்துகள் ஏற்படும். செய்தி; (குஜராத் மார்பி தொங்குபால விபத்து, தான்சேனியா - விக்டோரியா ஏரியில் வீழ்ந்து விமான விபத்து (19 பேர் மரணம்). 8ம் அதிபதி சுக்ரன் (சூரிய கிரகணம் துலா லக்னம்) சூரியனுடன் அஸ்தங்கம் நெருப்பினால் விபத்து, நில நடுக்கம், பூகம்பம், சுரங்க விபத்துகள் ஏற்படும்.

சந்திர கிரகணம்;

8.11.2022 முழு சந்திர கிரகணம் நெருப்பு ராசியான மேஷத்தில், மேஷ லக்னத்தில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் கார்த்திகை சுக்ல பட்ச பவுர்ணமி செவ்வாய்கிழமை மாலை 5.14 முதல் 6.18 வரை இருக்கும்.

குரு (வ)

ராகு

சந்

செ (வ)

8.11.2022

மாலை

4.32

சனி

கே

பு

சூரி சுக்

ராகு

செ

15.8.1947

புது டெல்லி

நள்ளிரவு

00.00 மணி

சந் சூரி பு

சுக்

சனி

கேது

குரு

இந்த கிரகணத்தில் செவ்வாய் கிரகம் தனது வட்டப் பாதையில் 24.13 பாகையில் சுழன்று கொண்டிருக்கிறது. இது 'அதி கிராந்தி' (declination)  எனப்படும். சூரியினிடமிருந்து அனுமதிக்கப்பட்ட கிரக சாய்வு 23.36 பாகையை விட இது விலகிச் செல்லும்போது தனது செயல் பாட்டினை, குண காரகங்களை இழந்து தாறுமாறான பலன்களையும் விளைவுகளையும் தருகிறது. (நில நடுக்கோட்டிற்கு வடக்கு அல்லது தெற்கில் கிரகங்களின் கோண தார அமர்வு 'கிராந்தி' அல்லது 'கிரக சாய்மானம்' எனப்படும்). செவ்வாயின் இந்த அமர்வு வக்ர கதியில் உள்ளது. இந்த வக்ர கதியில் பின்னோக்கி 13.11.2022 நகர்ந்து ரிஷப ராசியில் 12.3.2023 வரை இருக்கும் செவ்வாய் முற்றிலும் மாறுபட்ட பலன்களை தரும்.

மேலே குறிப்பிடப்பட்ட ஜாதக அமைப்பு 8.11.2022 கோச்சார அமைப்பு மற்றும் இந்தியாவினுடையது. சந்திர கிரகணம் நிகழும் செவ்வாய்க்கிழமை மிதுன லக்னத்தில் செவ்வாய் வக்ர கதியில் அமர்ந்து 8ம் பார்வையாக சனியை பார்க்கிறார். இது சனி சார்ந்த காரகங்கள் பாதிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. மகரம் நில ராசியாக அமைவதால் நில நடுக்கம், பூகம்பம், கனிம வளம் சார்ந்த பிரச்னைகள், இரும்பு, நிலக்கரி, இரயில் மற்றும் விமான பாதிப்புகள், வேலை நிறுத்தங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கிரகணம் நிகழும் மேஷ லக்னாதிபதி செவ்வாய் தனக்கு 3ல் எல்லைகளை, வரைமுறைகளை குறிக்கும் இடத்தில் வக்ரமாக இருப்பது இந்தியாவின் அண்டை நாடுகளுடனான இணக்கக் குறைவு அதிகரித்து பதட்டமான சூழ்நிலை ஏற்படும். இந்த நிலை செவ்வாய் ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலமான 13.11.2022 முதல் 12.3.2023 வரை நீடிக்கும்.

தனிநபர் ஜாதகங்களில் கிரகண பாதிப்பு எப்படி இருக்கும்.

இது பற்றி பல வடமொழி ஜோதிட நூல்களை எழுதியுள்ள திரு. ஆர். சந்தானம் தனது "PREDICTIVE HINDU ASTROLOGY' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளது.

1. ஜென்ம நட்சத்திரத்தில் கிரகணம் ஏற்பட்டால் அது துன்பம் தருகிறது.

2. கிரகணம் ஏற்படும் நட்சத்திரத்திற்கு முன், பின்னுள்ள நட்சத்திரங்கள் பாதிப்பு அடைகின்றன.

3. சந்திரனிலிருந்து எண்ணும்போது, உப ஜெய ஸ்தானங்கள் என்னும் 3, 6, 10, 11 ம் இடங்களில் ஏற்படும் கிரகணம் நன்மை தருகிறது.

4. கிரகணம் ஏற்படும் 1, 4, 5, 7, 9 அல்லது 10ம் வீடுகள் நன்மை தருகின்றன.

4. (அ) இவற்றில் கேந்திரங்கள் எனப்படும் 1, 4, 7, 10ல் கிரகணம் நிகழும் பாகையில் உள்ள கிரகங்கள் நன்மை செய்கின்றன.

5. கிரகணம் ஏற்படும் 2, 3, 6, 8, 11, 12ம் வீடுகள் தீமை தருகின்றன.

5. (அ) இங்கு 11ம் இடம் லாப ஸ்தானமாக கருதப்படுவதில்லை.

சுப, அசுப கிரக வேறுபாடு கிரகணத்தின்போது இல்லை.

சூரிய, சந்திர கிரகணம் பிறந்த கால ராகு, கேது, சனி, செவ்வாய் இருக்கும் ராசியில் ஏற்பட்டால் தீய பலன் தருகிறது.

பிறந்த கால கேது இருந்த வீட்டில் கிரகணம் நிகழ்ந்தால் உடல்நிலை பாதிப்படைகிறது.

விம்சோத்திரி தசா படி நடக்கும் புத்தி, அந்தரங்கள் அதிக பாதிப்பு தருகிறது.

இரண்டு மூண்று கிரகங்கள் கிரகணம் ஏற்படும் ராசியில் இருந்தால், கிரகணம் ஏற்படும் லக்ன பாகைக்கு நெருக்கமான பாகையில் இருக்கும் கிரகம் அதிக பாதிப்பைத் தரும்.

சர ராசியில் நிகழும் கிரகணம் தீய பலன்களைஉடனடியாகத் தருகிறது.

ஸ்திர ராசியில் நிகழும் கிரகணம் தீய பலன்களை இரண்டு பட்சங்களில் (ஒரு பட்சம் = 15 நாட்கள்) தருகிறது.

உபய ராசிகளில் நிகழும் கிரகணம் அடுத்த 6 மாதங்கள் வரை தனது தீய பலன்களை தொடரும்.

கிரகணம் நிகழும் நாள் (கிழமை) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிரகணம் ஏற்படும் ராசியில் பிறந்த கால ஜாதகத்தில் வக்ர கிரகம் இருந்தால் அந்த வக்ர கிரகத்தின் ஆட்சி வீட்டிற்கு 7ல் உள்ள பாவம் (பாவங்கள் 2 ஆட்சி வீடுகள் இருந்தால்) பாதிக்கப்படும். 

இந்த பதிவில் கொடுக்கப்பட்ட சில தகவல்கள் 'EXPRESS STAR TELLER' நவம்பர் மாத இதழில் திரு. சச்சின் மல்ஹோத்ரா மற்றும் திரு. அணில் அகர்வாலா எழுதியுள்ள கட்டுரைகளிலிருந்து தமிழ் மொழி கற்றோர் பயன் பெறும் நல்லெண்ணத்தில் கையாளப்பட்டது. இதற்காக அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இப் பதிவின் தகவல்கள் எவர்க்கேனும் சிறிதளவாவது உதவியிருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

இதனை எனது ஆச்சாரியர் குருஜி திருப்பூர் GK ஐயா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

பதிவும் ஆக்கமும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்

சென்னை

+91 9962859676

Intricacies of Nakshatras

  Intricacies  of Nakshatras   The relationship between a planet and the lord of the constellation is not unknown to the founding father...