வைணவ சம்ப்ரதாயம் - ஶ்ரீசடாரி சாதித்தல்
வைணவ சம்ப்ரதாயம் - ஶ்ரீசடாரி சாதித்தல் விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்ட திரு. ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் எழுதிய 'ஹிந்து மதத்தில் சில.. ஏன், எதற்காக என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புகள். ப்ரும்ம வைவர்த்த புராணம் கூறுவது; ஸ்நானம் தானம் தபோ ஹோமோ தேவதா பித்ரு கர்ம சI தத்ஸர்வம் நிஷ்பலம் யாதி ல்லாட திலகம் வினாII நெற்றியில் திலகம் இடாமல் செய்யப்படும் தியானம், தானம், தவம், ஹோம்ம், தேவ பித்ரு கார்யங்கள் யாவும் பயன்ற்றவை ஆகும். ஆகவே நாம் நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஜாதி அடையாளம் அல்ல. அது சமய சின்னம் ஆகும். நெற்றியில் புருவ மத்தியில் மூளையின் முன்புறத்தில் பீனியல் க்ளாண்டு என்ற ஒரு சுரப்பி எள்ளது. ஆக்ஞா சக்ரம் அல்லது மூன்றாம் கண் எனும் இதை உயிர்ப்பிக்கவே பல்வேறு பொருட்கள் திலகமாக இடப்படுகின்றன. நெற்றியில் அணியும் திலகம் நெற்றியைக் குளிர வைத்து உடல் உபாதையிலிருந்து நம்மைக் காக்கிறது. பொருட்களின் விஞ்ஞான கூற்றின் படி, சந்தனம் குளிர்ச்சியையும், விபூதி சர்மத்தை சுத்தி செய்தும், குங்குமம் மற்றும் மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்தும் நம்மைக் காக்கின்றன. பெருமாளின் திருவடியைச் சூடுவதாக எண்ணியே ஶ்ரீ...