ஜோதிடம் - திரேக்கானமும் நோய் உன்டாகும் பாவங்களும்
ஜோதிடம் அறிந்த சான்றோர்களுக்கு திரேக்கானம் என்ற வார்த்தையின் உள்ளார்ந்த கருப்பொருள் புரிந்திருக்கும். மனித உடற்கூறு திரேக்கான முறையில் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஜோதிடம் கூறும் உண்மை. நோயின் தாக்கம் அல்லது விபத்து ஏற்படும் உடலின் பாகங்களை திரேக்கான ரீதியாக ஜோதிடம் வழிகாட்டுகிறது. பன்னிரன்டு ராசிகளுக்கு ராசிக்கு மூன்றாக முப்பத்தி ஆறு திரேக்கானங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு திரேக்கானம் 10 பாகை என்ற அளவில் 0° -10° முதல் திரேக்கானமும் 10°01' முதல் 20° இரண்டாம் திரேக்கானமும் 20°01' முதல் 30° மூன்றாம் திரேக்கானமும் ராசிகளில் அமைகின்றன. இவை நாடி ஜோதிட முறையில் பலன் கூற அதிகமாக பயன் படுத்தப்படுகின்றன. திரேக்கானம் என்பது திரிகோண முறையில் கிரக இணைவை குறிப்பதே ஆகும். நாடி முறையின் மூலம் திரேக்கானமே. தொடரும் ஜீன் தாக்கங்களின் பாரம்பரியக் குணப் பண்புகளை திரேக்கானம் மூலம் அறியலாம். பராசரர் முறையில் முதல் திரேக்கான அதிபதி ராசி அதிபதியாவார் இரண்டாம் திரேக்கான அதிபதி 5ம் அதிபதியாவார் மூன்றாம் திரேக்கான அதிபதி 9ம் அதிபதியாவார் ஜோதிடத்தில் பொதுவாக பராசரர் முறையே பயன்படுத்தப்படுகி...