Posts

Showing posts with the label Astrology

கிரகணங்கள் - ஒரு ஜோதிட பார்வை

Image
  ஆச்சார்யா தேவோ பவ; நமஸ்காரம் குருஜி நாம் அனைவரும் அறிந்தபடி சூரிய கிரகணம் 25.10.2022 நிகழ்ந்தது. சந்திர கிரகணம் 8.11.2022 அன்று மாலை 4.32 மணி முதல் 6.18 மணி வரை நடக்க இருக்கிறது. இரண்டு கிரகணங்களும் ஒரு பட்ச (15 நாட்கள்) இடைவெளியில் நடக்கிறது. பழைய நூல்களில் இப்படி இரு கிரகணங்கள் நிகழ்வு அசாதாரணமான நிகழ்வுகளையும் பதட்டமான சூழ்நிலைகளையும் போர்ச்சூழ்நிலைகளையும் ஏற்படுத்தும் என கூறுகின்றன. பொதுவாகவே கிரகணங்கள் இலையுதிர் காலங்களில் பயிர், பச்சைகளுக்கு பூச்சி தாக்கு, அழிவு, பஞ்சம், கொள்ளை நோய், போர் பதற்றம் முதலியற்றை ஏற்படுத்தும். இந்த இரு கிரகண கூட்டு ஒரு போர் விளைவதற்கான சூழ் நிலையையும், உலகளாவிய மந்த நிலையையும் (மீன்டும்) ஏற்படுத்தும்.  சர இராசிகளில் தீய, பாவ கிரகங்களின் அமர்வு போர்நிலையை வேகப்படுத்தும். தற்போதைய கோச்சாரத்தில் வக்ர செவ்வாயின் பார்வை சனிக்கு. சூரிய கிரகணம் காற்று இராசியில் சூறாவளி, புயலை ஏற்படுத்தும். வான் விபத்துகள், பயங்கரமான விபத்துகள் ஏற்படும். செய்தி; (குஜராத் மார்பி தொங்குபால விபத்து, தான்சேனியா - விக்டோரியா ஏரியில் வீழ்ந்து விமான விபத்து (19 பேர் மரணம்)...

ஜோதிடம் - திரேக்கானமும் நோய் உன்டாகும் பாவங்களும்

Image
 ஜோதிடம் அறிந்த சான்றோர்களுக்கு திரேக்கானம் என்ற வார்த்தையின் உள்ளார்ந்த கருப்பொருள் புரிந்திருக்கும். மனித உடற்கூறு திரேக்கான முறையில் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஜோதிடம் கூறும் உண்மை. நோயின் தாக்கம் அல்லது விபத்து ஏற்படும் உடலின் பாகங்களை திரேக்கான ரீதியாக ஜோதிடம் வழிகாட்டுகிறது. பன்னிரன்டு ராசிகளுக்கு ராசிக்கு மூன்றாக முப்பத்தி ஆறு திரேக்கானங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு திரேக்கானம் 10 பாகை என்ற அளவில்  0° -10° முதல் திரேக்கானமும் 10°01' முதல் 20° இரண்டாம் திரேக்கானமும் 20°01' முதல் 30° மூன்றாம் திரேக்கானமும் ராசிகளில் அமைகின்றன. இவை நாடி ஜோதிட முறையில் பலன் கூற அதிகமாக பயன் படுத்தப்படுகின்றன. திரேக்கானம் என்பது திரிகோண முறையில் கிரக இணைவை குறிப்பதே ஆகும். நாடி முறையின் மூலம் திரேக்கானமே. தொடரும் ஜீன் தாக்கங்களின் பாரம்பரியக் குணப் பண்புகளை திரேக்கானம் மூலம் அறியலாம். பராசரர் முறையில் முதல் திரேக்கான அதிபதி ராசி அதிபதியாவார் இரண்டாம் திரேக்கான அதிபதி 5ம் அதிபதியாவார் மூன்றாம் திரேக்கான அதிபதி 9ம் அதிபதியாவார் ஜோதிடத்தில் பொதுவாக பராசரர் முறையே பயன்படுத்தப்படுகி...