சீதையின் தாயாகிய திரிசடை
திரிசடை இராமாயணத்தில் அதிகம் அறியப்படாத , அறிந்து கொள்ளாமலேயே தவறாகவும் பார்க்கப்பட்ட பாத்திரங்களில் ஒருத்தி 'திரிசடை'. அரக்கர் குலத்தில் பிறந்தவள். ஞானி. சிறந்த தபஸ்வினி. இராவணனின் தம்பி விபீஷணனுக்கும் அவன் மனைவி சரமைக்கும் பிறந்த பெண். இராவணண் போல் விபீஷணனும் சிறந்த சிவ பக்தன். 'திரிசடை' என்றால் வடமொழியில் 'வில்வம்' என்று பொருள். மூன்று இலைகளைக் கொன்டது வில்வக் கொத்து. திரி+சடை என்பது திரிசடையாயிற்று. வில்வம் சிவபெருமானுக்குரியது. அவருடைய 'திரிசூலமே' 'திரிசடையாயிற்று' என்றும் கூறவதுன்டு. 'லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் 'ௐ வில்வ தள வாஸின்யை நம;' என்று வில்வ இலையில் வாசம் செய்யும் மஹாலஷ்மியே என்று குறிப்பு உள்ளது. பிறப்பால் திரிசடை அரக்க குலத்தவளானாலும், அவள் காட்டும் அன்பு காரணமாக தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். கம்ப ...