சீதையின் தாயாகிய திரிசடை





திரிசடை 

 இராமாயணத்தில் அதிகம் அறியப்படாத , அறிந்து கொள்ளாமலேயே தவறாகவும் பார்க்கப்பட்ட பாத்திரங்களில் ஒருத்தி 'திரிசடை'. அரக்கர் குலத்தில் பிறந்தவள். ஞானி. சிறந்த தபஸ்வினி. இராவணனின் தம்பி விபீஷணனுக்கும் அவன் மனைவி சரமைக்கும் பிறந்த பெண். இராவணண் போல் விபீஷணனும் சிறந்த சிவ பக்தன். 'திரிசடை' என்றால் வடமொழியில் 'வில்வம்' என்று பொருள். மூன்று இலைகளைக் கொன்டது வில்வக் கொத்து. திரி+சடை என்பது திரிசடையாயிற்று. வில்வம் சிவபெருமானுக்குரியது. அவருடைய 'திரிசூலமே' 'திரிசடையாயிற்று' என்றும் கூறவதுன்டு.

         'லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் 'ௐ வில்வ தள வாஸின்யை நம;' என்று வில்வ                    இலையில் வாசம் செய்யும் மஹாலஷ்மியே என்று குறிப்பு உள்ளது.

          பிறப்பால் திரிசடை அரக்க குலத்தவளானாலும், அவள் காட்டும் அன்பு                  காரணமாக தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். கம்ப                                  ராமாயணத்தில் கம்பன் திரிசடையை (வயதில் சிறியவளாயினும்)

          தாய்க்கு நிகராக அறிமுகம் செய்கிறான். சீதா தேவியே திரிசடையை                   அன்னை-அன்னை-அன்னை என்று மூன்று இடத்தில் அழைத்து தன்                          அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்துகிறாள். 

         அரக்கர்கள் நடுவே சீதைக்கு ஆறுதல் சொன்னவள் திரிசடை. தான் ஒரு                 கனவு கண்டதாகவும் அதன் படி சீதையின் கணவன் சீக்கிரமே வந்து                         அவளை சிறை மீட்டு செல்வான் எனவும் திரிசடை கூறுகிறாள். அத்துடன்             'தன்னை விரும்பாத பெண்ணை இராவணன் தொட்டால் அவன் தலை                   வெடிக்கும்' என்ற சாபம் இருப்பதையும் திரிசடை சீதைக்கு சொல்கிறாள்.           சீதைக்கு உயிர் வாழ நம்பிக்கை அளித்ததே இந்தச் செய்திதான். தன்னை           அசோகவனத்தில் காண வந்த அனுமனிடம்  சீதை இதைத்                                            தெரிவிக்கிறாள்.

          அடுத்ததாக தன் பெரிய தந்தையாகிய இராவணன் சீதையை ஏமாற்ற                    மாயா சனகராக ஒரு அரக்கனை அனுப்பியுள்ளதாக சொல்கிறாள்.

           'உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே

           வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்

           அந்தம் இல் கொடுந்தொழில் அரக்கனாம் என

            சிந்தையின் உணர்த்தினாள் அமுதின் செம்மையாள்'     என்று கம்பர்                    திரிசடையின் உயர்வைக் கூறுகிறார்.

            தன் பெரிய தந்தை செய்கை நியாயமற்று இருந்தாலும், திரிசடை                            அவனைத் தூற்றி ஒரு சொல் கூறினாள் இல்லை. சீதையை                                           அரக்கிகளிடம் இருந்து காப்பவளாகவும் ஆறுதல் அளிப்பதில் தாயகவும்             இருந்த திரிசடையை  நாமும் போற்றுவோம்.

            



.

 















Comments

Popular posts from this blog

திருக்குர்ஆனும் திருக்குறளும்

ஆன்மீக விவரணங்கள் - ஶ்ரீமத் பாகவத புராணம்

அரவமும் ஆராதனையும்