ஶ்ரீஇராமர் - சூர்ப்பனகை - ஒரு காதல் விவாதம்

 ஶ்ரீஇராமர் - சூர்ப்பனகை - ஒரு காதல் விவாதம்

அன்பு நண்பர்களே, தகைசால் பெரியோரே,
நான் முகநூலில் அவ்வப்போது காணப்படுபவன். எனக்கென ஒரு வாசகர் வட்டமோ பின் தொடர்பவர்களோ இல்லை. என் மனதில் தோன்றும் ஜோதிட மற்றும் பொது கருத்துக்களை வெளியிடுபவன். இலக்கிய, ஜோதிட தன்னார்வலன்.
இலக்கிய ஈடுபாட்டினால் பல தமிழ், ஆங்கில நூல்களை படித்துக்கொண்டு இருக்கிறேன். பல அறிவு சார்ந்த விவாதங்களை பார்த்துக்கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்.
கம்ப இராமயணத்தை சற்று உள்ளார்ந்து படிக்கையில் கீழே குறிப்பிட்ட கம்பனின் வரிகள் எனக்குள்ளே 'இராமன் இத்தகைய பொருள் படும்படி கூறியிருப்பானா' என்று ஒரு சந்தேகம் தோன்றியது. கம்பனை தம்முள்ளே வரித்த எனக்கு மிகவும் பிடித்த முப்பெரும் அறிஞர்களான மதிப்பிற்குறிய திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள், சொல்லின் செல்வி திருமதி. பாரதி பாஸ்கர், பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களில் ஒருவர் விளக்கம் தர இயைந்து தருவார்கள் என நம்புகிறேன்.
.கம்பனின் ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகை ஶ்ரீஇராமனின் அழகில் மையல் கொண்டு அவரை அடைந்நே தீர்வது என ஒரு அழகிய வடிவங் கொண்டு அவரிடம் தன் காதலை கூறுகிறாள்.


'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான். 49
'ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக் கற்பின் எம் மோய்,
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல்;
போர் அணி பொலம் கொள் வேலாய்! பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின், என் உயிர் காண்பென்' என்றாள். 50
அருத்தியள் அனைய கூற, அகத்துறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல் உண்டாட்டம் கொண்டான்,
'"வருத்தம் நீங்கு அரக்கர்தம்மில் மானிடர் மணத்தல், நங்கை!
பொருத்தம் அன்று" என்று, சாலப் புலமையோர் புகல்வர்' என்றான். 51
'பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது,
'இராவணன் தங்கை" என்றது ஏழைமைப் பாலது' என்னா,
அரா-அணை அமலன் அன்னாய்! அறிவித்தேன் முன்னம்; தேவர்ப்
பராவினின் நீங்கினேன், அப் பழிபடு பிறவி' என்றாள். 52
'ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன், ஊங்கில்
ஒருவனோ குபேரன், நின்னொடு உடன்பிறந்தவர்கள்; அன்னார்
தருவரேல், கொள்வென்; அன்றேல், தமியை வேறு இடத்துச் சார;
வெருவுவென்;-நங்கை!' என்றான்; மீட்டு அவள் இனைய சொன்னாள்: 53
'காந்தர்ப்பம் என்பது உண்டால்; காதலின் கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம்;
ஏந்தல்-பொன்-தோளினாய்! ஈது இயைந்தபின், எனக்கு மூத்த
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும்; வேறும் ஓர் உரை உண்டு' என்றாள். 54
கம்ப இராமயணத்தில் - ஆரண்ய காண்டம் - சூர்ப்பனகை படலத்தில்
'ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன், ஊங்கில்
ஒருவனோ குபேரன், நின்னொடு உடன்பிறந்தவர்கள்; அன்னார்
தருவரேல், கொள்வென்; அன்றேல், தமியை வேறு இடத்துச் சார்'
வெருவுவென்;-நங்கை!' என்றான்; மீட்டு அவள் இனைய சொன்னாள்: 53
இங்கு இராமன் 'நின்னோடு உடன் பிறந்தவர்கள், அன்னார் தருவரேல் கொள்வேன்; அன்றேல் தமியை வேறு இடத்துச் சார்' என்று கூறுகையில் சூர்ப்பனகையை மணம் புரிய இராமர் தன் நிபந்தனை ஏற்கப்படுமாயின் சம்மதிப்பதாக பொருள் படுகிறதே - இதன் உண்மையான விளக்கத்தை தெளிவு படுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.
சூர்ப்பனகையின் தாய் சாலகடங்கடன் என்னும் அரசன் மகள், தந்தை அந்தணர். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். 'குபேரனும், இராவணனும்., உடன் பிறந்தோர். இவர்கள் உன்னை முறைப்படி எனக்கு திருமணம் செய்து கொடுத்தால் உன்னை ஏற்பேன்' என்று இராமன் கூறியதாக பொருள் படும் இந்த கூற்று சரியா?
விளக்கம் தாருங்கள் பெரியோர்களே;
அன்புடன்,
சேதுமாதவன் வெங்கட்ராவ்
8838535445
ssssethu@gmail.com
Chennai 600073See less

Comments

Popular posts from this blog

நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்

கம்பன் கூற்றில் இராமன் என்னும் மனிதன்

பக்திக்கோர் இலக்கணம் கண்ணப்ப நாயனார்