ஶ்ரீஇராமர் - சூர்ப்பனகை - ஒரு காதல் விவாதம்
ஶ்ரீஇராமர் - சூர்ப்பனகை - ஒரு காதல் விவாதம் அன்பு நண்பர்களே, தகைசால் பெரியோரே, நான் முகநூலில் அவ்வப்போது காணப்படுபவன். எனக்கென ஒரு வாசகர் வட்டமோ பின் தொடர்பவர்களோ இல்லை. என் மனதில் தோன்றும் ஜோதிட மற்றும் பொது கருத்துக்களை வெளியிடுபவன். இலக்கிய, ஜோதிட தன்னார்வலன். இலக்கிய ஈடுபாட்டினால் பல தமிழ், ஆங்கில நூல்களை படித்துக்கொண்டு இருக்கிறேன். பல அறிவு சார்ந்த விவாதங்களை பார்த்துக்கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். கம்ப இராமயணத்தை சற்று உள்ளார்ந்து படிக்கையில் கீழே குறிப்பிட்ட கம்பனின் வரிகள் எனக்குள்ளே 'இராமன் இத்தகைய பொருள் படும்படி கூறியிருப்பானா' என்று ஒரு சந்தேகம் தோன்றியது. கம்பனை தம்முள்ளே வரித்த எனக்கு மிகவும் பிடித்த முப்பெரும் அறிஞர்களான மதிப்பிற்குறிய திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள், சொல்லின் செல்வி திருமதி. பாரதி பாஸ்கர், பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களில் ஒருவர் விளக்கம் தர இயைந்து தருவார்கள் என நம்புகிறேன். .கம்பனின் ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகை ஶ்ரீஇராமனின் அழகில் மையல் கொண்டு அவரை அடைந்நே தீர்வது என ஒரு அழகிய வடிவங் கொண்டு அவரிடம் தன் காதலை கூறுகிறாள். 'ந...