ஜோதிடம் - திரேக்கானமும் நோய் உன்டாகும் பாவங்களும்


 ஜோதிடம் அறிந்த சான்றோர்களுக்கு திரேக்கானம் என்ற வார்த்தையின் உள்ளார்ந்த கருப்பொருள் புரிந்திருக்கும். மனித உடற்கூறு திரேக்கான முறையில் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஜோதிடம் கூறும் உண்மை. நோயின் தாக்கம் அல்லது விபத்து ஏற்படும் உடலின் பாகங்களை திரேக்கான ரீதியாக ஜோதிடம் வழிகாட்டுகிறது.

பன்னிரன்டு ராசிகளுக்கு ராசிக்கு மூன்றாக முப்பத்தி ஆறு திரேக்கானங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு திரேக்கானம் 10 பாகை என்ற அளவில் 

0° -10° முதல் திரேக்கானமும்

10°01' முதல் 20° இரண்டாம் திரேக்கானமும்

20°01' முதல் 30° மூன்றாம் திரேக்கானமும்

ராசிகளில் அமைகின்றன. இவை நாடி ஜோதிட முறையில் பலன் கூற அதிகமாக பயன் படுத்தப்படுகின்றன. திரேக்கானம் என்பது திரிகோண முறையில் கிரக இணைவை குறிப்பதே ஆகும். நாடி முறையின் மூலம் திரேக்கானமே. தொடரும் ஜீன் தாக்கங்களின் பாரம்பரியக் குணப் பண்புகளை திரேக்கானம் மூலம் அறியலாம்.

பராசரர் முறையில் முதல் திரேக்கான அதிபதி ராசி அதிபதியாவார்

இரண்டாம் திரேக்கான அதிபதி 5ம் அதிபதியாவார்

மூன்றாம் திரேக்கான அதிபதி 9ம் அதிபதியாவார்

ஜோதிடத்தில் பொதுவாக பராசரர் முறையே பயன்படுத்தப்படுகிறது. ஶ்ரீ கிருஷ்ண ஆச்சார்யர் எழுதியள்ள கிருஷ்ணீயம் எனும் நூல் பராசரர் முறையிலிருந்து சற்றே மாறு படுகிறது.

பன்னிரண்டு ராசிகளும் கிருஷ்ணீயத்தில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

மேஷம், சிம்மம், தனுசு

ரிஷபம், கன்னி, மகரம்

மிதுனம், துலாம், கும்பம்

கடகம், விருச்சிகம், மீனம்

இவற்றில்,

                                                                                        அதிபதிகள்

                                    முதல் திரேக்கானம்     2ம் திரேக்கானம்  3ம் திரேக்கானம்

சர ராசிகள                   1ம் அதிபதி                            5ம் அதிபதி            9ம் அதிபதி

ஸ்திர ராசிகள்            9ம் அதிபதி                            1ம் அதிபதி            5ம் அதிபதி

உபய ராசிகள்                   5ம் அதிபதி                            9ம் அதிபதி            1ம் அதிபதி

இந்த சிறு மாற்றம் குறிப்பிடத்தக்கது. இது கேரள மாநிலத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பன்னிரண்டு பாவங்களிலும் திரேக்கானங்கள் குறிப்பிடும் உடல் உறுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

   

 

பாவம்

முதல்

திரேக்கானம்

இரண்டாம் திரேக்கானம்

மூன்றாம் திரேக்கானம்

1

தலை

கழுத்து

இனப்பெருக்க உறுப்பின் மேள்பகுதி

2

வலது கண்

வலது தோள்

வலப்பக்க இனப்பெருக்க உறுப்பு

3

வலது காது

வலது கை

வலது விரைப்பை

4

வலது மூக்கு

வலது பக்கம்

வலது தொடை

5

வலது கன்னம்

வலது மார்பு

வலது முழங்கால்

6

வலது தாடை

வலது வயிறு

வலது கணுக்கால்

7

முகம்

தொப்புள்

பாதம்

8

இடது தாடை

இடது வயிறு

இடது கணுக்கால்

9

இடது கன்னம்

இடது மார்பு

இடது முழங்கால்

10

இடது மூக்கு

இடது பக்கம்

இடது தொடை

11

இடது காது

இடது கை

இடது விரைப்பை

12

இடது கண்

இடது தோள்

இடது பக்க இனப்பெருக்க உறுப்பு, ஆசன வாய்

 

ஒரு பாவத்தில் லக்ன புள்ளி  முதலாவது திரேக்கானத்தில் இருந்தால், அந்த ராசி அந்த ஜாதகரின் தலைப்பகுதியைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை அடுத்துஉள்ள 5 ராசிகளான 2,3,4,5,6 ம் ராசிகள் வலது பக்கமாகவும், 7ம் ராசி கழுத்து என்றும் 12, 11,10,9,8 ம் ராசிகள் இடது பக்கமாகவும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

உதாரணமாக, கால புருஷரின் மேஷ ராசியின் முதலாவது  திரேக்கானத்தில் லக்னப்புள்ளி இருந்தால் அவரது உடல் அமைப்பு ராசியில் கீழே கண்டவாறு இருக்கும்.


 

இடது கண்

 

ல/தலை

 

வலது கண்

 

வலது காது

 

இடது காது

 

 

முதல் திரேக்கானம்

 


 

வலது மூக்கு

 

இடது மூக்கு

 

வலது கன்னம்

 

இடது கன்னம்

 

இடது தாடை

 

முகம்

 

வலது தாடை


கால புருஷரின் மேஷ ராசியின் இரண்டாவது  திரேக்கானத்தில் லக்னப்புள்ளி இருந்தால் அவரது உடல் அமைப்பு ராசியில் கீழே கண்டவாறு இருக்கும்.


 

இடது தோள்

 

ல/கழுத்து

 

வலது தோள்

 

வலது கை

 

இடது கை

 

 

இரண்டாம் திரேக்கானம்

 

வலது பக்கம்

 

இடது பக்கம்

 

வலது மார்பு

 

இடது மார்பு

 

இடது வயிறு

 

தொப்புள்

 

வலது வயிறு


கால புருஷரின் மேஷ ராசியின் மூன்றாவது  திரேக்கானத்தில் லக்னப்புள்ளி இருந்தால் அவரது உடல் அமைப்பு ராசியில் கீழே கண்டவாறு இருக்கும்.

 

 

இடப் பக்க

மர்ம உறுப்பு

 

 இனப் பெருக்க உறுப்பின் மேல் பகுதி

 

வலப் பக்க

மர்ம உறுப்பு

 

 

வலது விரைப்பை

 

 

இடது விரைப்பை

 

 

 

 

 

மூன்றாம் திரேக்கானம்

 

 

வலது தொடை

 

 

 

 

இடது தொடை

 

வலது முழங்கால்

 

இடது முழங்கால்

 

இடது கணுக்கால்

 

 

பாதம்

 

வலது கணுக்கால்

 

உதாரணமாக ஒரு லக்னத்தை எடுத்துக்கொண்டு அதில் மூன்று திரேக்கானங்களின் நிலையையும் பார்க்கலாம்.

தனுசு லக்னத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

முதல் திரேக்கானத்தில் 0° - 10° லக்னம் இருந்தால்

3 வலது தொடை

 

1 வலது கன்னம்

1 வலது தாடை

1 முகம்

2 வலப் பக்கம்

 

2 வலது மார்பு

2 வலது வயிறு

2 தொப்புள்

1 வலது மூக்கு

 

3 வலது முழங்கால்

3 வலது கணுக்கால்

3 பாதம்

3 வலது விரைப்பை

 

 

 

 

 

தனுசு லக்னம் முதல் திரேக்கானத்தில் இருக்கும்போது உடல் உறுப்புகள் மற்ற இராசிகளின் 1,2,3 திரேக்கானங்களில்

1 இடது தாடை

2 வலது கை

 

2 இடது வயிறு

1 வலது காது

 

3 இடது கணுக்கால்

3 வலது மர்ம உறுப்பு

1 இடது கன்னம்

2 வலது தோள்

 

2 இடது மார்பு

1 வலது கண்

 

3 இடது முழங்கால்

3 இனப்பெருக்க உறுப்பின் மேற்பகுதி

3 இடப் பக்க

மர்ம உறுப்பு

3 இடது விரைப்பை

1 இடது மூக்கு

2 கழுத்து

 

2 இடது தோள்

2 இடது கை

2 இடது பக்கம்

1 தலை

 

1 இடது கண்

1 இடது காது

3 இடது தொடை

 

இரண்டாம் திரேக்கானத்தில் 10°01’ - 20° லக்னம் இருந்தால்

2 வலது தொடை

 

3 வலது கன்னம்

3 வலது தாடை

3 முகம்

1 வலப் பக்கம்

 

1 வலது மார்பு

1 வலது வயிறு

1 தொப்புள்

3 வலது மூக்கு

 

2 வலது முழங்கால்

2 வலது கணுக்கால்

2 பாதம்

2 வலது விரைப்பை

 

 

 

 

 

தனுசு லக்னம் இரண்டாம் திரேக்கானத்தில் இருக்கும்போது உடல் உறுப்புகள் மற்ற இராசிகளின் 1,2,3 திரேக்கானங்களில்

3  இடது தாடை

1 வலது கை

 

1 இடது வயிறு

3 வலது காது

 

2  இடது கணுக்கால்

2 வலது மர்ம உறுப்பு

3 இடது கன்னம்

1 வலது தோள்

 

1 இடது மார்பு

3 வலது கண்

 

2 இடது முழங்கால்

2 இனப்பெருக்க உறுப்பின் மேற்பகுதி

2 இடப் பக்க

மர்ம உறுப்பு

2 இடது விரைப்பை

3 இடது மூக்கு

1 கழுத்து

 

1  இடது தோள்

1 இடது கை

1  இடது பக்கம்

3 தலை

 

3 இடது கண்

3 இடது காது

2  இடது தொடை

 

மூன்றாம் திரேக்கானத்தில் 20°01’ - 30° லக்னம் இருந்தால்

1 வலது தொடை

 

2 வலது கன்னம்

2 வலது தாடை

2 முகம்

3 வலப் பக்கம்

 

3 வலது மார்பு

3 வலது வயிறு

3 தொப்புள்

2 வலது மூக்கு

 

1 வலது முழங்கால்

1 வலது கணுக்கால்

1 பாதம்

1 வலது விரைப்பை

 

 

 

 

 

 

தனுசு லக்னம் மூன்றாம் திரேக்கானத்தில் இருக்கும்போது உடல் உறுப்புகள் மற்ற இராசிகளின் 1,2,3 திரேக்கானங்களில்

2  இடது தாடை

3 வலது கை

 

3 இடது வயிறு

2 வலது காது

 

1 இடது கணுக்கால்

1 வலது மர்ம உறுப்பு

2 இடது கன்னம்

3 வலது தோள்

 

3 இடது மார்பு

2 வலது கண்

 

1 இடது முழங்கால்

1 இனப்பெருக்க உறுப்பின் மேற்பகுதி

1 இடப் பக்க

மர்ம உறுப்பு

1 இடது விரைப்பை

2 இடது மூக்கு

3 கழுத்து

 

3  இடது தோள்

3 இடது கை

3 இடது பக்கம்

2 தலை

 

2 இடது கண்

2 இடது காது

1  இடது தொடை

 

இப்பொழுது கிரகங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளைப் பார்ப்போம்.

தலை                  -      செவ்வாய்

முகம்                  -      சுக்ரன்

கழுத்து                 -      புதன்

தொடை                -      குரு

மார்பு                   -      சந்திரன்

இருதயம்               -      சூரியன்

முழங்கால்             -      சனி

பாதம்                  -      ராகு

கால புருஷ ராசிகளின் அடிப்படையில் கிரகங்கள் மேற்கண்ட வரிசையில் உள்ளன. அவை அவைகளின் ராசிகளில் அந்ந அந்த கிரகங்கள் இருக்கும்போது காயம், மருக்கள், மச்சங்கள் அல்லது ஆபரணங்கள் அந்த உடல் பகுதியில் இருக்கும். பிரஸ்ன ஜோதிடத்தில் திருட்டுப் போன பொருளை கண்டு பிடிக்க உதவுகிறது.

 

கிரக குறிப்பீடுகள் – மற்றொரு வகை

தலை                   -      சனி

கண்கள்                 -      செவ்வாய்

காதுகள்                -      குரு

மூக்கு                  -      சுக்ரன்

முகம்                  -      புதன்

தாடை                  -      சூரியனும், சந்திரனும்

 

மற்றும் ஒரு முறை, கிரகங்கள் காட்டும் உடல் பாகங்களை பின்வருமாறு காட்டுகிறது.

சனி                    -      மர்ம உறுப்பு, தலை, தோள்பட்டை

குரு                    -      காதுகள்

செவ்வாய்              -      கைகள், கண்கள், ஆசனவாய்

சுக்ரன்                  -      மூக்கின் நுணி

சூரியன்                 -      தாடை, முழங்கால், தொப்புள்

புதன்                   -      முதுகு

சந்திரன்                -      மார்பு, கன்னம், தொடை

 

உடலின் இடது புறமாக நோற் ஏற்படுமா, வலது புறமா என்ற கேள்விக்கு ஒரு கிரகம் திரேக்கானத்தில் முதல் 5 (0° - 5°) க்குள் இருந்தால் உடல் பாகத்தின் இடது பகுதி என்றும் (6° - 10°) பாகைக்குள் இருந்தால் வலது பகுதி பாதிக்கப்படும் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கிரக வேகமும் வீரியமும்;

சூரியன், செவ்வாய் முதல் திரேக்கானத்திலும்

குரு, சுக்ரன் இரண்டாம் திரேக்கானத்திலும்

சந்திரன், சனி மூன்றாம் திரேக்கானத்திலும்

வேகமும், வீரியமும் பெறுகிறார்கள்.

உதாரணமாக, செவ்வாய், சந்திரன் முதல் திரேக்கானத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

மாத்திரை, அறுவை சிகிச்சை, செவ்வாய் ஆதிக்க மருந்துகள்.

ஆயின்ட்மெண்ட், டானிக் சந்திர ஆதிக்க மருந்துகள்.

முதல் திரேக்கானத்தில் செவ்வாய் இருந்தால் அறுவை சிகிச்சை வெற்றி, விரைவில் குணமாகும்.

பொதுவாக 1ம் இடம், 6 ம் இடம், 8 ம் இடம் சம்மந்தப்பட்டு, 6ம் இட அதிபதியின் தசா புத்தி, அந்தர காலங்களில் நோய் ஏற்படுகிறது.

ஜோதிடரின் தக்க ஆலோசனைகளின் மூலம் நோயின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். திரேக்கானத்தை சிறப்பாக ஆராய்ந்து நோய் ஏற்படக்கூடிய பாகத்தைத் துல்லியமாக கன்டறிந்து சிறந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்                                 குறள் -948

 

நல்லன நினைந்து வல்லானை வணங்குதல் செய்வோம்.

 இதில் தரப்பட்டுள்ள குறிப்புகள் எனது குருஜி திருப்பூர் ஶ்ரீ கோபால கிருஷ்ணன் அவர்களின் மருத்துவ ஜோதிட புத்தகத்திலிருந்தும், இன்னும் சில நால்களிலிருத்தும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

என் பரமார்த்த குருஜி திருப்பூர் ஶ்ரீ கோபாலகிருஷ்ணன் (GK) அவர்களின் கமல பாதங்களில் சமர்ப்பணம்.

ஆக்கமும் பதிவும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்

சென்னை

+91 9962859676 (Whatsapp) +91 8838535445

Email: veeyes55@yahoo.in

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Uranus, Neptune and Pluto