மாதா பிதா குரு தெய்வத்திற்கு சமர்ப்பணம் ஓம் அக்ஞான-திமிராந்தஸ்ய க்ஞானாஞ்ஜன-ஷலாகயா சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஶ்ரீ-குரவே நம; நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன். அன்புடையீர், முந்தைய இரு பதிவில் வேத மஹரிஷி ஶ்ரீவியாஸர் அருளிய மகாபாரதத்தின் உருவாக்கம் பற்றியும் அது கூறும் கால பிரமாணங்களைப் பற்றியும் அறிந்து கொன்டோம். இந்த பதிவில் பிரபஞ்சம் உருவானதை பற்றி ஶ்ரீவியாஸர் கூறுவதைப் பார்ப்போம். ‘இவ்வுலகம் பிரகாசமில்லாமலும் அறிவில்லாமலும் எங்கும் இருளால் மூடப்பட்டுமிருந்தபோது, பிரஜைகளின் வித்தாகவுள்ளதும் அழிவில்லாததுமாகிய ஒரு (முட்டை) அண்டம் உண்டாயிற்று. பெரியதும் அற்புதமுமான அந்த அண்டத்தை யுகங்களுக்கு ஆதி காரணமென்று சொல்லுகின்றனர். சத்தியமும், பிரகாசமானதும், அழியாததும், ஆச்சரியமும், நினைத்ததற்கரியதும், எல்லாவற்றிலும் ஒரே தன்மையாக இருப்பதும், வெளிப்படாததும், எல்லாவற்றுள்ளும் பிரவேசத்திருப்பதும், ஜடங்களும் ஜீவன்களும் தானாக இருப்பதுமாகிய பிரம்மமானது, அந்த அண்டத்தில் ...