நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்
நவராத்திரி
'சக்தியால் உலகம் வாழ்கிறது'
'நாம் வாழ்வை விரும்புகிறோம்'
'ஆதலால் சக்தியை வேண்டுகிறோம்'
மனித வாழ்க்கைக்கு மூன்று வித சக்தி வேண்டும். 1. அறிவு 2. செல்வம் 3. தைரியம். இந்த மூன்றையும் வேண்டி தெய்வத்தை வேண்டுகிறோம். இம்மைக்கும் மறுமைக்குமான வழியை இறைவனை வேண்டுவதும் அதனை தெய்வம் செய்கது, செய்கிறது, செய்யும். தன் பக்தன் சுந்தர மூர்த்தி நாயனாருக்காக தூது சென்ற பரமசிவனாரையும், தனக்கு சுபத்திரையை மணம் செய்ய வேண்டிய அர்ச்சுனனுக்கு அவளை கவர்ந்து செல்ல உபாயங்கள் சொன்ன ஶ்ரீ கிருஷ்ணரையும் தெய்வம் எல்லாம் செய்யும் என்பதற்கு உதாரணமாக கொள்ளலாமே.
ஶ்ரீமந்நாராயணனுடைய சக்தியாக திகழும் லஷ்மி; சிவபிரானின் சக்தியாக விளங்கும் அன்னை பார்வதி தேவி; படைப்பின் ஸ்வரூபமான பிரம்மனின் தலைவியான ஸரஸ்வதி தேவி; இம்மும்மூர்த்திகளின் மூன்று தேவியரும் மூன்று வடிவங்கள்; இதன் பொருள் ஒன்றே; சக்தி ஒன்றே; இந்த மூவரையும் ஒன்றாக வழிபட நவராத்திரி ஏன்? நவராத்திரி காலத்தில் யோகமாயையான தேவியர் லஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை மூவரும் மூன்று விதமான அவதாரம் எடுத்து பல அசுரர்களையும், தீய சக்திகளையும் அழித்ததை துன்பத்திலிருந்து விடுபட்ட மானிடம் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடி மகிழ்வதாக சாத்திரம் கூறுகிறது. பராசக்தி என்றும், எங்கும், எப்போதும் அவள் உண்மையொளியாக, அகத்திலும், புறத்திலும், வானை வியாபித்தும், பூவுலகிலும், பாதாளத்தயையும் எல்லையின்றி காக்கும் தெய்வமாக திகழ்கிறாள்.
சக்தி என்பது தமிழில் வல்லெழுத்து சேர்ந்து இருக்கும் வார்த்தை. அதனை தன் வடிவமாக கொண்டவள் பராசக்தி. விக்கிரமாதித்யன் வணங்கிய தெய்வமவள்; காளிதாஸனுக்கு நதிப்பிரவாகமாக கவிதையைத் தந்தவள். பாரதத் திருநாட்டின் அன்னையவள்.
சரத் காலத்தின் துவக்க காலத்தில், அகிலத்தை காக்கும் தேவியை ஆராதனை செய்யும் காலம் இந்த ஒன்பது நாட்களாகும். 'தவம், கல்வி, தெய்வத்தை சரண்டைதல்' இந்த மூன்றும் கிரியா யோகம் (கர்ம யோகம்) என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.
இந்த ஒன்பது நாளும் தியானம், கல்வி, தவம் இவற்றில் ஈடுபட முடியாதோர், கடைசி ஒன்பதாம் நாள் மட்டுமாவது விரதமிருந்து, தேவியை வழிபடுவது சிறப்பு.
சக்தியை வணங்குவோம். சக்தியும், முக்தியும் பெறுவோம்.
ஆக்கமும், பதிவும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
+91 8838535445
ssssethu@gmail.com
Comments
Post a Comment