கம்பன் கூற்றில் இராமன் என்னும் மனிதன்

கம்பன் கூற்றில் இராமன் என்னும் மனிதன்



வாலியை மறைந்து இருந்து வீழ்த்திய இராமன், வாலிக்கு மோட்சமளித்து, சுக்ரீவனுக்கு பட்டம் சூட்டிய பின், தம்பி இலக்குவன் இரகுவரனை வாலியை மறைந்து கொன்ற இழிச்செயலை 'தருமம் அற்ற செயலென' வெதும்புகின்றான். அதற்கு மறுமொழியாக இரகுவரன் 'தான் செய்த செயலுக்கு பரிகாரமாக' தவம் செய்வதாக கூறுகறார்.
'இல்லறந் துறந்தி லாதோர்
இயற்கையை யெதிர்ந்து போரின்
வில்லறந் துறந்து வாழ்வேற்
கின்னன மேன்மை யில்லாச்
சில்லறம் புரிந்து நின்ற
தீமைகள் தீரு மாறு
நல்லறந் துறந்த நோன்பின்
நவையற நோற்பல் என்றான்'
இலக்குவனிடம் தான் வில்லறத்தை மீறியதற்காக வருந்தும் ஶ்ரீராமர், மேலும் கூறுகிறார். இவ்வுலகில் உண்மையுடையவர்கள் ஒரு சிலரே. நமக்கு வேண்டிய நன்மை என்ன என்று பார்த்துக் கொண்டு, மற்றவைகளை நீக்க வேண்டும். அதுவுமேயின்றி குற்றமில்லாதவன் என்று சொல்ல பூவுலகில் யாரும் இல்லை. ஆம்! 'மறுவில்லாத உத்தமன் இந்த உலகில் ஏது? இருக்கவே முடியாது' என்ற உண்மையை இராமன் மூலமாக கம்பர் உணர்த்துகிறார்.
வாலி சிறந்த சிவபக்தி செல்வன். வாலி வேத ஞானம் பெற்றவன். அந்தணர்கள் மட்டுமே வேதம் கற்பதற்கு உரியவராதலால், வேதம் கற்றவர்களிடமிருந்து செவியில் கேட்டு உணர்ந்தவன்.
அனுமனும் வாலியின் பெருமை பற்றி இராமனிடம் கூறுமிடத்து, ஐம்பூதங்களையும், சூரிய, சந்திரர்களையும், இயமானனையும் எட்டிப் பிடிப்பது போல் எட்டுத்திசைகளின் எல்லை வரை சென்று நாளும் சிவனை வழிபட்டவன், அவ்வாறு வழிபடவே அவன் ஆற்றல் பயன் பட்டது என்று குறிப்பிடுகிறான்.
இங்கு இராமன் கேட்போர் சொல் கேட்டு, 'ஆராயாது செய்த செயல் மானிடர் செயல்' என்று இராமன் செய்கையை மாசின்றி அறத்தின் பால் கம்பர் கூறலுற்றார்.
ஆக்கமும் பதிவும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
+918838535445
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ssssethu@gmail.com

 

Comments

Popular posts from this blog

நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்

ஜோதிட கருத்துக்கள் - பிற ஆசிரியர்கள்