அகநானூறு கூறும் தள்ளாமை - மானிடம், விலங்கினம், பறவையினம்

அகநானூறு கூறும் தள்ளாமை - மானிடம், விலங்கினம், பறவையினம் இன்றைய உலகின் மிகப்பெரும் போராட்டம் முதியோர்களுடையதே. தள்ளாத வயதில் பெற்ற மக்கள் மற்றும் உறவினரின் புறக்கணிப்பு, மக்கள் நல்லவர்களாக இருந்து காப்பாற்ற முயன்றாலும் வம்புகளால் அதனை ஒதுக்குதலும், முதிய தாய்தந்தையர்க்கு கஞ்சி வார்க்காமல் அவர்களை சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாக, அடிமைகளாக நடத்தும் பாவம், இந்த கொடுமையினால் மானத்தை விட்டேனும் வயிறு வளர்க்க பல இடங்களில் நின்று பிச்சை எடுக்கும் நிலை, கண் தெரியாமலோ, காதுகேளாததாலோ அவர்கள் முதுமையில் படும்பாடு 'நல்ல மக்கட்பேறு என்பது' அவர்களுக்கு கிட்டாததே. பொல்லாத வயிற்றுக் கவலை தள்ளாத வயதில் இருக்கக் கூடாது என்று முன்னோர் நன்றியறிதலை ஒரு அறமாக்கி, தந்தை, தாயினை போற்றுவது தலையான தொண்டு என்றும், 'அன்னையும் தந்தையும் முன்ன்றி தெய்வம்' என்றார்கள். பண்படாத மக்களைத் திருத்த வழி இல்லை. ஏழை மக்களுக்கு பெற்றோருக்கு தொண்டு செய்ய மனத்தில் அன்பு இருந்தாலும், வாழ்க்கைப் போராட்டம் இடம் தருவதில்லை. சில மேலை நாடுகளில் வயதானவர்களுக்கு முதுமைப் பணம் தந்து (முதுமைக் காப்பீட்டு நிதி மூலம்) உதவ...