ஜோதிட கருத்துக்கள் - பிற ஆசிரியர்கள்
ஆச்சார்ய தேவோ பவ; நமஸ்காரம் குருஜி
ஜோதிட கருத்துக்கள் (பொது)
(பிற ஆசிரியர்கள்)
தமிழாக்கம்;
மூல நூல்; ஜோதிட ஆச்சார்யர் வெங்கடேச தெய்வக்ஞர் இயற்றிய ‘சர்வார்த்த
சிந்தாமணி’ – வடமொழி – சமஸ்க்ருதம்
ஆங்கிலத்தில் திரு ஜே. என். பாஸ்யன் அவர்களின் ‘ஹோரா ஷடக்’ (A
book in English “Hora Shatak” by Sri. J.
N. Bhasin)
1.
துறவு
மற்றும் பிரிவினை யோகங்கள்;
இராகு, சனி, சூரியன் இந்த மூன்று கிரகங்களில் இரண்டோ அல்லது மூன்றும்
சேர்ந்தோ ஒரு வீட்டில் இருந்தாலோ, பார்த்தாலோ அந்த ஜாதகர் அந்த வீட்டின் காரக,
பாவக உறவுகள், பொருட்களிலிருந்து விலகி இருப்பார். உதாரணமாக இராகு, சனி, சூரியன்
அல்லது சனி+இராகு அல்லது சூரியன்+சனி, அல்லது சூரியன்+இராகு 10ம் வீட்டையோ அல்லது
10ல் வீட்டு அதிபதியின் மீது தங்களின் ஆதிக்கம் இருக்கும்படி 10ம் வீட்டில்
இருந்தாலோ, 10ம் வீட்டைப் பார்த்தாலோ ஜாதகர் ஒரு நாட்டின் ராஜாவாக இருந்தால் அவர்
நாட்டை இழப்பார், பட்டம், பதவி, தொழில், கௌரவம், புகழ், அந்தஸ்து அனைத்தும்
அழியும். இந்த தீய கிரகங்களின் பலத்தைப் பொறுத்து இந்த தீய காலம் நீடிக்கும்.
இது அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும்.
7ம் வீடு, அதன் அதிபதி, 7ல் இருத்தல், 7ம் வீட்டைப்
பார்த்தால் அல்லது களத்திர காரகனான சுக்ரன் அல்லது குரு(இங்கு செவ்வாய்க்குப்
பதில் குரு காரகனாக குறிப்பிடப் படுகிறார்) பார்த்தால் கணவன் மனைவிக்குள் பிரிவினை
ஏற்படும்.
2ம் வீடு; உடைமைகள், செல்வம், சொத்துக்கள் இழப்பு ஏற்படும்.
3ம் வீடு; சகோதர, சகோதரிகள் பிரிவு.
4ம் வீடு; சொந்த ஊர், பூர்வீகம் விட்டு தூரம் செல்லுதல்.
5ம் வீடு; குழந்தைகளை விட்டு பிரிவு
6ம் வீடு; தாய் மாமனை விட்டு பிரிவு
8ம் வீடு; ஜாதகரின் மனைவி செல்வம், சொத்துக்கள், நகைகள் இழத்தல்.
9ம் வீடு; பரம்பரை வழக்கங்களை மீறுதல், அவமதித்தல், தன் ஜாதி, மத
சடங்கு, சம்பிரதாயங்களை விட்டு விடுதல் அல்லது அவமதித்தல்.
11ம் வீடு; தன்னுடைய மூத்த சகோதரனை பிரிதல், முயற்சிகள், தொழில்,
செயல்களில் தோல்வி.
12ம் வீடு; உலக இன்பங்களைத் துறந்து சன்னியாசியாக வாழ்தல்
சனி, சூரியன். இராகு வயதானவற்றைக் குறிப்பதால், இள வயது மரணம் நிகழாது
அதற்கு பதிலாக அவைகள் இருக்கும்/பார்க்கும் வீடுகளின் காரக/பாவக தன்மைகளில்
பாதகத்தை தரும்.
2. தன் வீட்டில் அமர்ந்த காரக
கிரகங்கள்; (காரகோ பாவ நாஸ்தி;)
ஒரு கிரகம் தன் வீட்டில் அமர்ந்து அது அந்த
வீட்டின் காரகராக இருந்தால் அதன் பலன் மிக நல்லதாகவோ மிக மோசமானதாகவோ அந்த
வீட்டுடன் இணைந்த கிரகங்களின் சேர்க்கையை/பார்வையைப் பொறுத்து அமைகிறது.
உதாரணமாக குரு தனுசு அல்லது மீனத்தில் அமர்வது
சிம்ம, விருச்சிக லக்னங்களுக்கு 5ம் இடமாகிறது. இப்போது குருவிற்கு அசுப கிரக
சேர்க்கை, பார்வை இருந்தால் அது புத்திர காரகம், 5ம் இடம், 5ம் இட அதிபதி என்ற 3
வழிகளிலும் குருவை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.
மாறாக, சுப கிரக சேர்க்கை/பார்வை குருவிற்கு
கிடைக்கும் போது ‘காரகோ பாவ நாஸ்தி’ எனும் விதி விலக்கு பெறுகிறது. சுப
பார்வை/சேர்க்கை பெற்ற குரு தன் பாவத்தை கெடுப்பதில்லை. இங்கு 9ம் வீட்டையும் 5ம்
வீட்டிற்கு 5ம் இடம் என்ற வகையில் ‘பாவத் பாவா’ என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
3.
தன்
வீட்டைப் பார்க்கும் கிரகப் பார்வை;
அசுப கிரகங்கள் தங்கள் வீட்டை 7ம் பார்வையாக பார்க்கும் போது அந்த
வீடு சுட்டிக் காட்டும் உறவுகள் பாதிப்படைகின்றன.
உதாரணமாக, துலா லக்னத்திற்கு 5ல் கும்பத்தில் அமர்ந்த சூரியன் 7ம்
பார்வையாக தன் சிம்ம வீட்டை பார்க்கிறது. ஜாதகர் பொருளாதார, வண்டி, வாகன, தொழில்
முன்னேற்றங்களைக் கொடுத்தாலும், ஜாதகரது மூத்த சகோதரத்தை அது கடுமையாக பாதித்து
அவரை இழக்க வைக்கிறது.
4. இராகு/கேதுவுடன் இணைந்த சுப
கிரகங்கள்;
இயற்கை சுப கிரகங்கள் தங்கள் வீடுகளில் இருந்து
இராகு/கேதுவுடன் இணையும் போது மிகுந்த பலம் பெறுகின்றன.
இரண்டு வீடுகள் உள்ள கிரகங்கள் தன்னுடைய ஒரு
வீட்டைப் பார்க்கும்போது அதற்கு ஒரு சுப கிரகத்தின் பார்வை கிடைத்தால் அதன் இரண்டு
வீடுகளும் பலம்/பலன் பெறுகின்றன.
உதாரண ஜாதகம்; (பண்டிட் ஜவஹர்லால் நேரு)
|
|
|
ராகு |
|
பண்டிட்
ஜவஹர்லால் நேரு |
ல சந் |
|
|
சனி |
||
குரு கேது |
சூரியன் |
புதன் சுக்ரன் |
செவ்வாய் |
இந்த கடக லக்ன ஜாதகத்தில் 3ல் அமர்ந்த செவ்வாய்
தனது மேஷ வீட்டைப் (10ம் இடம்) பார்க்கிறது. 4ல் அமர்ந்த புதனும், சுக்ரனும் 7ம்
பார்வையாகவும், குருவின் 5ம் பார்வையும் மேஷத்திற்கு உள்ளது. இதனால் செவ்வாயின்
விருச்சிகமும் பலன் பெறுகிறது. பண்டிட் ஜவஹர்லால் நேரு 117 ஆண்டுகள் இந்தியாவின்
பிரதமாராக பேர், புகழ், கௌரவம், அரசியல் செல்வாக்கு பெற்றவராக இருந்தார்.
5. தன்னுடைய வீட்டிற்கு 8ல் அமர்ந்த
கிரகத்தின் யோகம்;
ஒரு கிரகம் தன்னுடைய வீட்டிலோ, தன் உச்ச வீட்டிலோ
கேந்திரத்திலோ அல்லது சுப வீட்டிலோ அமர்ந்து அந்த வீடு அந்த கிரகத்தின் சொந்த
வீட்டின் 8ம் வீடாக அமைந்து அசுப கிரகத்தின் பார்வை பெற்றால் அந்த கிரகம் சுட்டிக்
காட்டும் காரக உறவு பாதிக்கப்படும்.
|
செவ்வாய் |
|
|
|
|
குரு |
|
|
|
||
|
|
ல |
|
இந்த துலா லக்ன ஜாதகரின் 3ம் இட தனுசு இராசியின் குரு கடகத்தில்
உச்சமாக 8ம் இடத்தில் லக்னத்தின் கேந்திர 7ம் மேஷ செவ்வாயின் 4ம் பார்வையில்
இருக்கிறார். சுப குரு 10ம் கேந்திரத்தில் தன் உச்ச வீட்டில் அசுப செவ்வாயின்
பார்வையில் இருப்பதால், லக்னத்திறகு 3ம் வீடு குறிக்கும் இளைய சகோதரம்
பிறப்பதையும் அவருடைய குறைந்த ஆயுளையும் குறிக்கிறது.
இந்த விதியை இள வயது குழந்தைகளுக்கு பொருத்திப்
பார்ப்பது சிறந்த பலன்களைத் தரும்.
6. சந்திர அதியோகமும் – கேமதுரும
யோகமும்;
அதியோகம் என்பது செல்வச்செழிப்பு, நல்ல ஆரோக்யம், ஆயுள் முதலியவற்றை
தருவது. புதன், குரு, சுக்ரன் முதலான சுப கிரகங்கள் சந்திரனிலிருந்து 6, 7, 8 ஆகிய
இடங்களில் இருந்தால் சந்திர அதியோகம் ஏற்படுகிறது. இதே போல் லக்னத்தில் இருந்து
அமைவது லக்ன அதியோகம் எனப்படும்.
‘ஜாதகதேஷ்மார்கம்’ என்ற நூலின்படி சந்திரனுக்கு
முன்னும், பின்னும் (2, 12 ம் இடங்கள்) கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஏற்படும்
அவயோகமாகும்.
‘கேமதுரும யோக அவயோகத்தில் பிறந்த ஜாதகர் பிற ஆண்களின்
மனைவிமார்களிடம் ஆசை கொண்டவராயும், அடுத்தவரின் உணவில் விருப்பமுடையவராகவும்,
தவறான நடத்தை, அநீதி, மற்றும் பொல்லாத குணமுடையவராகவும், கடனாளியாகவும், சிற்றின்ப
ஆசை உடையவராகவும் இருப்பார்’ என்று ‘ஜாதகதேஷ்மார்கம்’ என்ற நூல் கூறுகிறது.
இந்த ‘கேமதுரும யோகம்’ சந்திரனுக்கு கேந்திரத்தில் ஒரு கிரகம்
இருந்தாலோ அல்லது லக்னத்திலிருந்து சந்திரன் கேந்திரத்தில் இருந்தாலோ செயல்படாது.
சந்திர அதியோகத்தின்படி 6, 8ல் அமர்ந்த சுப கிரகங்கள் சந்திரனுக்கு
இரு புறமும் உள்ள 2, 12ம் இடங்களை தங்களது 7ம் பார்வையால் பார்ப்பது ‘கேமதுரும
அவயோகத்தை’ செயலற்றதாக்கும்.
7. இரண்டு பகைக்கிரகங்களுடன் சேர்ந்த
கிரகம் செய்யும் பாதகம்;
தனது பகை வீட்டில் அமர்ந்த ஒரு கிரகம் தனது வலிமையை இழக்கிறது. ஒரு
கிரகத்தின் வலிமையை வைத்து மட்டுமே அது தரும் பலன் நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு
கிரகத்தின் வலிமையை அதனுடன் சேர்ந்த, அதனைப் பார்த்த கிரகங்கள் அந்த கிரகத்தின்
நட்பு கிரகங்களா, பகை கிரகங்களா என்பதை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.
|
|
|
ல |
சனி |
உதாரணம் |
|
|
|
சூரியன் சுக்ரன் |
||
|
|
|
|
இங்கு மிதுன லக்னத்திற்கு 3ல் சூரியன் ஆட்சியாக உபஜெய ஸ்தானத்தில்
இருந்தாலும் அவர் தன்னுடைய பகை கிரகமான சுக்ரனுடன் அமர்ந்து, மற்றொரு பகை கிரகமான
சனியின் பார்வை பெறுகிறார். பாதகம் பெற்ற சூரியன் தந்தைக்கு காரகமாவதால் இங்கு
தந்தையின் உடல் நிலையும், ஆயுளும் பாதிக்கப்பட்டு இருப்பதையும், 3மிடம் குறிக்கும்
காரகம் பாதிக்கப்படுவதையும் குறிக்கிறது.
Comments
Post a Comment