சாணக்யன் கூறும் அறம்

 சாணக்யம் கூறும் அறம்



ஒருவன் இந்த உலகத்திற்கு தனியே வருகிறான். தன்னுடைய முடிவுகளை தானே எடுத்து அதனை விளைவுகளை தானே சந்திக்கிறான். தன்னுடைய நல்ல, தீய செயல்களுக்கான விளைவை தானே ஏற்கிறான். உயர்நிலை, சித்ரவதை இரண்டையும் அனுபவிக்கிறான். நிலையில்லாத இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. பார்ப்பதற்கு அனைவரோடும் சேர்ந்திருப்பது போன்று தோன்றினாலும் மனிதன் தனித்தே பிரிந்து நிற்கிறான் என்பது கசப்பான உண்மை.

ஒருவர் ஒரு சுலோகத்தை அல்லது அதன் பகுதியையேனும், ஒரு எழுத்தையேனும் எப்போதும் சிந்தித்தபடி இருக்க வேண்டும்.. ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ந்தறிவது, தானம் செய்வது, பெரியோரை மதித்தல் நித்திய கடமையாக இருக்க வேண்டும். (இதனால் காலம் விரயமாகாது. கவனம் சிதறாது).
ஆலயம் தொழ செல்கையில் ஒருவராகவும், படிக்கும் போது இருவராகவும், பாடும்போது மூவராகவும், நடந்து போகும்போது நால்வராகவும், வயலில் வேலை செய்யும் போது ஐவராகவும், போர்க்களம் செல்லும்போது எண்ணற்றவர்களும் செல்ல வேண்டும். இதன் தாத்பரியம் என்ன. (வழிபாடு தனஅமையில் செய்ய வேண்டியது, படிக்கும்போது விவாதித்து தெர்ந்து கொள்ள இருவர் தேவை. ஒருவர் பாடும்போது தம்புரா, தபலா பக்க வாத்தியமாக இருக்க மூவர் வேண்டும். வெளியில் நடந்து செல்கையில் நான்கு திசைகளிலும் நால்வருப் எச்சரிக்கையாக பார்த்து விபத்துக்களை தவிர்க்கலாம். வயல் வேலையில் ஒருவர் நீர் பாய்ச்சவும், ஒருவர் களை எடுக்கவும், கால்நடை மற்றும் மனிதர்கள் பயிரை சேதிப்படுத்தாமல் மூன்றாமர் காக்கவும், நான்காமவர் விதை விதைக்கவும். ஐந்தாமவர் மண்ணை பதப்படுத்த, பதாமரிக்கவும் தேவை. போரில் ஈடுபட பலர் தேவை.
நகர்வலம் செல்லும் மன்னன், ஊர்ஊராகத் திரியும் அந்தணனும், யோகிகளும் மரியாதை பெறுகிறார்கள். ஒருவம் ஊர்சுற்றியாக இருந்தால் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள். (அரசன் நகர்வலம் செல்லாமல் அரண்மணைக்குள்ளே இருந்துவிட்டால் நாட்டு நடப்பு தெரியாது.) அந்தணன் குறிப்பிட்ட இடத்திலோ ஒரே இடத்தில் நீண்ட காலம் கழாத்தால் அறிவுத் திறன் வளராது. அந்தணன் அறிவு மிகப்பட அவன் செல்வாக்கு உயரும். யோகிகள் இந்த உலகமெங்கும் பரவிக் கிடக்கும் தெய்வீக ஞானத்தை தேடி அலைகிறார்கள். பெண்களுக்கு ஊர் சுற்றும் பழக்கம் ஏற்புடையது அல்ல. அநேக அபாயங்களும், சமூகத்தில் நற்பெயருக்கு களங்கமும் ஏற்படும்.
காலம் நில்லாது ஓடிக்கொண்டும், படைப்புகளை அழித்தும் உரு மாற்றிக்கொண்டும் இருக்கிறது.
தங்கத்திற்கு மதிப்புண்டு, மணமில்லை. கரும்புக்கு கனியில்லை, ஆனால் சுவை உண்டு. சந்தன மரத்திற்கு பூவில்லை, அனால் மணம் உணைடு. முடியாண்ட மன்னவரும் ஓரு நாள் இறப்பவரே. அறிஞர்கள் செல்வந்தர்களாக இருப்பதில்லை. உலகில் அனைத்துமே குற்றம், குறைகளுடனே படைக்ப்பட்டிருக்கின்றன.
சம அந்தஸ்து உடையவர்களிடையேயான நட்பும், அரசனுக்கு செய்யும் சேவையும், வணிக குலத்தார்க்கு வாணிபம் செய்வதே சிறப்பு.
குயிலின் அழகு அதனி குரலில் இருக்கிறது. ஒரு பெண்ணின் அழகு அவள் கணவனிடம் விசுவாசமாய் இருத்தல், அழகில்லாதவர்க்கு அழகைத்தருவது அறிவு, துறவிக்கு அழகு மன்னிக்கும் மாண்பாகும்.
மனிதன் பிரயாணங்களில் முதுமை அடைகிறான். குதிரை அசைவற்றிருந்தால் முதுமை அடைகிறது. உடலுறவு கொள்ளாத நிலையில் பெண்ணுக்கு முதுமை வந்து விடுகிறது. வெய்யிலில் துணி வாடி தன் சோபையை இழக்கிறது.
முட்டாள்களுக்கு பண்டிதர்களைக் (scholars) கண்டால் பகை உணர்வு ஏற்படுகிறது. ஏழைக்கு செல்வனிடமும், விலை மாதுவிற்கு நல்ல குடும்பத்துப் பெண்ணிடமும், விதவைக்கு சுமங்கலியிடமும் பகை உணர்வு தோன்றும்.
கீழ்க்கண்டவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவது பாவமில்லை. மாணவன், வேலைக்காரன், பயணி, பசியுற்றவன், பயந்தவன், பண்டகசாலைப்பொறுப்பாளன் (store-In-Charge) மற்றும் காவல் காப்போன் (அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருத்தாலும்) இவர்களை எழுப்புவதில் தவறில்லை. விழித்துக் கொள்வதால் இவர்கள் பயன் பெறுபவர்கள்.
தூக்கத்தில் இருக்கும் பாம்பையோ, அரசனையோ, குழந்தையையோ. நாயையோ, முட்டாளையோ எழுப்பக்கூடாது. (ஆழ்ந்த உறக்கத்தில் இருத்து அவர்கள் விழிக்கும் பட்சத்தில் அபாயம் அல்லது தொந்தரவுதான்.)
சாம்பலில் வெண்கலம் சுத்தப்படுகிறது. அமிலத்தில் செம்பு சுத்தப்படுகிறது. மாதவிடாய் மூலம் பெண் சுத்தப்படுகிறாள். ந்தி தன்னுடைய விரைவான ஓட்டத்தினால் சுத்தப் படுகிறது.
இந்த உலகில் மணி (Gem) போல் விலை உயர்ந்த பொருட்கள் மூன்று; உணவு, தண்ணீர், மற்றும் பரிவான வார்த்தை. முட்டாள்களுக்கோ பளபளக்கும் கற்கள்தாம் மணியாய் தெரிகிறது.
வருத்தம் நோயை வளர்க்கிறது, பால் உடம்பைவளர்க்கிறது, நெய் உடம்பில் வநிதுவை அதிகரிக்கச் செய்கிறது. இறைச்சி உண்பதால் உடம்பில் சதைதான் கூடுகிறது.
யானையிடம் இருந்து ஐந்நூறு அடி தள்ளியும், குதிரையிடம் இருந்து ஐம்பதடி தள்ளியும், கொம்புள்ள விலங்குகளிடம் இருந்து ஐந்தடி தளிளியும் இருக்க வேண்டும். ஆனால் தீயவர்களிடம் இருந்து?
யானையை அங்குசதுதாலும், குதிரையை கைகளாலும், கொம்புள்ள மிருகங்களை கம்பு கொண்டும், தீயவர்களைக் கத்தி போன்ற ஆயுதங்களாலும் அடக்க வேண்டும்.
செந்த மனிதர்களிடம் அன்பாகவும், அடுத்தவர்களிடம் இரக்கத்தோடும், தீயவர்களிடம் இரக்கமின்றியும். உதாரகுணம் உடையவர்களிடம் நேர்மையாகவும், முட்டாளிடம் அலட்சியமாகவும், பண்டிதர்களிடம் மரியாதையாகவும், பகைவனிடம் அஞ்சாமையோடும், குருவிடம் பணிவோடும், பெண்களிடம் மோகவசப்படாமலும் நடந்து கொள்கிறவனே சிறந்த மனிதன்.
மனிதன் வாழ வேண்டிய நெறியை காட்டும் சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் போற்றுதற்குரியது.
கருத்தும், ஆக்கமும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
+919962859676ழ8838535445


Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Love and Marriage - Astrological views