எண் 18

 

எண் 18 பற்றி 

எண் 18 இதிகாச, புராணங்களுடனும் சங்க இலக்கியங்களுடனும் மிகுந்த தொடர்புடையது.  அதில் சிலவற்றைப் பார்ப்போமா?

இதிகாசம் 

வியாசர் எழுதிய மகாபாரதம் 18 பர்வங்களைக் கொன்டது.

1. ஆதிபர்வம் 2. சபாபர்வம் 3. ஆரண்யக பர்வம் 4. விராட பர்வம் 5. உத்யோக பர்வம் 6. பீஷ்ம பர்வம் 7. துரோண பர்வம் 8. கர்ண பர்வம் 9. சல்லிய பர்வம் 10. சௌப்திக பர்வம் 11. ஸ்திரீ பர்வம் 12. சாந்தி பர்வம் 13. அனுசாசன பர்வம் 14. அசுவமேத பர்வம் 15. ஆசிரம வாசக பர்வம் 16. மௌசல பர்வம் 17. மகா பிரஸ்தானிக பர்வம் 18. சுவர்க்க ஆரோஹன பர்வம்.   என்பன.

பாரதப் போர் 18 நாட்கள் நடந்தது.

கௌரவர் சேனைத்தலைவராக பீஷ்மர் 10 நாட்கள் துரோணர் 5 நாட்கள் கர்ணன் 2 நாட்கள் மத்த நாட்டு அரசன் சல்லியன் அரை நாள் போரை நடத்தினர். சல்லியனை சகா தேவன் கொன்றான். அதன்் பின் பீமனுுக்கும துரியோதனனுக்கும் கதாயுத்தம் நடந்தது. பீமன் துரியனை கொன்றான்.

பாரதப் போரில் சேனை 18 அஷௌஹினி

கௌரவர் பக்கம் 11 அஷௌஹினி                        

பாண்டவர் பக்கம் 7 அஷௌஹினி                

1 அஷௌஹினி படை அணிவகுப்பு

1 தேர் 1 யானை 3 குதிரை 5 காலாள் =  1 பத்தி 

3 பத்தி                                                            =  1 சேனாமுகம்

3 சேனாமுகம்                                             =  1 குல்மம்

3 குல்மம்                                                       =  1  கணம்

3 கணம்                                                         =  1 வாகினி

3 வாகினி                                                      =  1 பிருதனை

3 பிருதனை                                                  =  1 சமு

3 சமு                                                               =   1 அனீகினி

10 அனீகினி                                                 =   1 அஷௌஹினி

1 அஷௌஹினி = 21870 தேர்+21870 யானைகள்+65610 குதிரைகள்+109350 காலாள்

இவை அனைத்தும் பாரதப்போரில் அழிந்தன.

பாரதப்போரில் கண்ணன் உரைத்த கீதை 18 அத்தியாயம் கொன்டது.









புராணங்கள் 18.

இவை 3 வகைப்படும். 

ராஜசிகம்    பிரம்மாவைப் பற்றியது

சத்துவம்       விஷ்ணுவைப் பற்றியது

தாமஸம்       சிவனைப் பற்றியது

18 புராணங்களில் 10 சிவனுக்கும், 4 விஷ்ணுவுக்கும், 2 பிரம்மாவிற்கும், 1 அக்னிக்கும் 1 சூரியனுக்கும் உரியது.

1. பிரம்ம புராணம் (ஆதி புராணம்) 2. பத்ம புராணம் 3. விஷ்ணு புராணம் 4. சிவ புராணம். 5. லிங்க புராணம் 6. கருட புராணம் 7. நாரத புராணம் 8. பாகவத புராணம் 9. கந்த புராணம் (மிகப் பெரியது) 10. பிரம்ம வைவர்த்த புராணம் 11. மார்க்கண்டேய புராணம் (மிகச் சிறியது) 12. வாமன புராணம் 13. வராக புராணம் 14. மச்ச புராணம் 15. கூர்ம புராணம் 16. பிரம்மாண்ட புராணம் 17. அக்னி (ஆக்கினேய) புராணம் 18. பவிசிய புராணம் (சூரியன்)

அசுரர்களுக்கும் தேவர்களுக்குமான போர் 18 வருடம் நடந்தது என கந்த புராணம் கூறுகிறது.

ஹரிஹர சுதன் ஐயப்பன் கோவில் 18 படிகளைக் கொன்டுள்ளது

5 இந்திரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, மெய்(கை கால்கள்)) 5 புலன்கள் (பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல்) 5 கோசங்கள் (அன்னமயம், ஆனந்தமயம், பிராணமயம், மனோமயம், ஞானமயம்) 3 குணங்கள் (ஸத்வ குணம், ரஜோகுணம், தமோகுணம்) ஆகிய இந்த 18 ஐயும் கட்டுப்படுத்தி வாழ 18 படிகளாக ஐயப்பன் கோவில் குறிப்பிடுகிறது.

சித்தர்கள் 18 பேர்

1. திருமூலர் 2. இராமதேவ சித்தர் 3. கும்ப முனி 4. இடைக்காடர் 5. தன்வந்திரி 6. வால்மீகி 7. கமலமுனி 8. போகர் 9. மச்ச முனி 10. கொங்கணர் 11. பதஞ்சலி 12. நந்தி தேவர் 13. போதகுரு 14. பாம்பாட்டி சித்தர் 15. சட்டை முனி 16. சுந்தரானந்தர் 17. குதம்பைச்சித்தர் 18. கோரக்கர்

தமிழில் 18 கீழ்க்கணக்கு நூல்கள்

1. திருக்குறள் 2. நாலடியார் 3. நான்மடிக்கடிகை 4. இன்னா நாற்பது 5. இனியவை நாற்பது 6. திரிகடுகம் 7. ஆசாரக்கோவை 8. பழமொழி 9. சிறு பஞ்ச மூலம் 10. ஏலாதி 11. முதுமொழிக்காஞ்சி 12. ஐந்திணை ஐம்பது 13. திணைமொழி ஐம்பது 14. ஐந்திணை எழுபது 15. திணைமாலை நூற்றைம்பது 16. கைந்நிலை 17. கார் நாற்பது 18. களவழி நாற்பது

போர்க்கருவிகள் 18

1. வில் 2. வாள் 3. வேல் 4. கதை 5. அங்குசம் 6. பரசு 7. பிந்திபாவம் 8. பரிசை 9. குந்தம் 10. ஈட்டி 11. கை வாள் 12. முள்தடி 13. கடுத்தி வை 14. பாசம் 15. சக்கரம் 16. ஹலம் 17. மழு(கோடரி) 18. முஸலம்

மிகச்சிறப்பு வாய்ந்த, நான் அறிந்த எண் 18 ஐ பற்றி சிறு குறிப்பு இது.


ஆக்கமும் பதிவும்

சேதுமாதவன் வெங்கட்ராவ்






Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Love and Marriage - Astrological views