கண்ணனை வென்ற விதுரர்
'மகாபாரதத்தில் விதுரர்'
மகாபாரதத்தில் அனைவரும் விதுரரை அறிந்திருப்பீர்கள். இவர் திருதராஷ்டிரர் மற்றும் பாண்டுவின் சகோதரர். மஹா முனிவர் வியாஸருக்கும் குரு வம்ஸத்தைச் சேர்ந்த விசித்ரவீர்யனின் மனைவிகளாகிய அம்பிகா, அம்பாலிகாவின் பணிப்பெண்ணாகிய பராஷ்மி என்பவளுக்கும் பிறந்தவர் விதுரர். மிகச்சிறந்த ஞானவான்.
விதுரரின் பிறப்பு வரலாறு
மாண்டவ்யர் என்ற முனிவர் ஆஸரமத்தில் தவத்தில் இருந்த போது அரண்மணையில் களவாடிய சில திருடர்கள் திருடிய பொருட்களுடன் ஆஸ்ரமத்தில் வந்து ஒளிந்து கொன்டனர். திருடர்களைத் தேடி வந்த அரண்மணைக் காவலர்கள் ஆஸரமத்தில் நுழைந்து திருடர்களுடன் மாண்டவ்ய முனிவரையும் பிடித்துக்கொண்டு சென்று அரசன் முன் நிறுத்தினர். திருடர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக திருடர்களுடன் சேர்த்து முனிவரையும் சித்ரவதை செய்து தண்டிக்கிறான்.
முனிவர் மாண்டவ்யர் தியானிக்க, அவர் முன் எமன் தோன்றுகிறான். முனிவர் யமனிடம் 'யாருக்கும் தீங்கு செய்யாத எனக்கு ஏன் இப்படி தண்டனை' என்று கேட்க அதற்கு எமன் 'நீர் சிறு வயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்ததற்கு பலன்' என்று கூறுகிறான். முனிவர் 'அறியாத வயதில் செய்ததற்கு தண்டனையா' எனக் கேட்க, 'அது தான் கர்மா' என பதில் கூறுகிறான் எமன். மாண்டவ்யர் கோபம் கொண்டு எமனை 'நீ பூவுலகில் பிறப்பாய். அரச குலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதபடி இருப்பாய்' என சாபம் கொடுத்தார். எமனே 'விதுரராக' அவதரித்தார்.
விதுரர் வைத்திருந்த வில் விஷ்ணுவின் வில். 'கோதண்டம்' எனும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது. அர்ஜுணன் கையில் உள்ள வில் பிரம்மாவினுடையது. அதற்கு 'காண்டீபம்' என்று பெயர். போர் வந்தால் அர்ஜுணனால் காண்டீபம் கொண்டு விதுரரின் வில் கோதண்டத்தை வெல்ல முடியாது. இதனை அறிந்திருந்த கண்ணன் பாண்டவர்க்காக தூது சென்ற போது தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதன்னுக்கு சினமூட்டி விதுர்ரைப் பற்றி கேவலமாக பேச வைத்து விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். விதுரரின் உதவி துரியோதனனுக்கு கிடைக்காமல் போனது.
கண்ணன் விதுரர் மாளிகையில் தங்கிய போது, விதுரர் மாளிகையின் அனைத்து பொருட்களையும் 'உன்னுடையது கண்ணா' என்று சொல்லி 'நான், எனது' என்று சொல்லாதல் தனது பணிவால் கண்ணனை வென்றார்.
விதுரரைப் போற்றிய தமிழ்ப் பாடல்
அருணகிரிநாதர் தாம் இயற்றிய 'திருப்புகழ்' பாடலிலே 'திருவேட்களம்' எனுமிடத்தில்
சதுர்த்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக
விதுரற்கும் ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன்
மருகோனே
முருகனைப் பற்றிப் பாடிய போது அருணகிரியார் விதுரரை 'விகடத் துறவாக்கிய' கண்ணனின் மருமகனே என்று குறிப்பிடுகிறார்.
துரியோதனனை விட்டு நீங்கிய விதுரர், காட்டிற்கு சென்று தவம் செய்து, இறுதியில் தர்மரை அடைந்து அவருக்கு தன் தவப்பயனைத் தந்து அவருடன் ஐக்கியமானார் என்று வியாஸ பாரதம் கூறுகிறது.
Comments
Post a Comment