'ஜோதிடம் - உங்களின் வாழ்க்கையின் வழிகாட்டி

 


எங்கே ஜோதிடம் உதவும்

அன்றாட வாழ்வில் நிச்சயம் ஜோதிடம் உதவுகிறது. எப்படி?

'பாட்ஷா' படத்தில் வருவது போல் எட்டு எட்டா உங்க வாழ்க்கையை பிரித்துக்கொள்ளுங்கள். இப்ப எந்த எட்டில் நீங்க இருக்கீங்க?

1  -  8     குழந்தை விளையாட்டு
9  -  16   படிப்பு
17-  24    திருமணம்
25 - 32    குழந்தை பெறுதல்-அதை வளர்த்தல்
33 - 40   சொத்து, செல்வம் சேர்த்தல்
41 - 48   வெளிஉலகம் அறிதல், சுற்றுலா பொழுதுபோக்கு
49 - 56   குழந்தைகள் திருமணம், வாழ்க்கை தீர்வு காணல்
57 -        ஓய்வு

பிறந்த குழந்தை வளரும் வரை அதன் உடல் ஆரோக்கியம், சிறு பிராய கல்வி பற்றி தெரிந்து கொள்ளலாம்

உயர்கல்வி, மேல்படிப்பு, மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி, வெளிநாட்டில் உயர்கல்வி பற்றி அறிந்துகொள்ளலாம்

வேலை, எப்போது, உள்ளூரா? வெளியூரா? வெளிமானிலமா? வெளிநாடா? வெளிநாட்டில் தற்காலிகமா? நிரந்தரமா? அறியலாம்.

திருமணம் ஆகுமா? ஆகாதா? உத்தேசமாக எந்த வயதில், குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, இணைந்து வாழ்தல்(Joint living),  தெரிந்துகொள்ளலாம்

குழந்தை பிறக்குமா, எவ்வளவு குழந்தைகள், மலட்டுத்தன்மை, செயற்கை கருத்தரிப்பு, தத்தெடுத்தல், இதுபோன்ற கேள்விக்கு விடை.

பரம்பரை சொத்து உண்டா? வழக்கு சாதகமாகுமா? வீடு கட்டலாமா? தோட்டம் வாங்கலாமா? தொழில் தொடங்கலாமா? வெளிநாட்டில் சொத்து வாங்கலாமா? வழக்கு வருமா? தொழிலில் பாதிப்பு வருமா? பங்குதாரர்கள் சேர்க்கலாமா?விலக்கலாமா? ஏமாற்றுவார்களா? எல்லா கேள்விக்கும் விடை உண்டு.

உடல்நலம் பாதிப்பு, நோய்கள் பற்றி, அறுவை சிகிச்சை செய்யலாமா? நீண்ட நாள் நோய் பாதிப்பு, மருத்துவம் பற்றி

கடைசியாக, காணாமல் போன பொருட்கள், மணிதர் பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

இது முடிவல்ல. இன்னும் உன்டு.

ஜோதிடம் தீர்வல்ல. ஆனால் ஒரு எச்சரிக்கை மணி.

ஒலிக்கட்டுமே!


ஆக்கமும் பதிவும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்
sparcinastro.com


Comments

Popular posts from this blog

ஜோதிட கருத்துக்கள் - பிற ஆசிரியர்கள்

சாணக்யன் கூறும் அறம்

திருமண பாவம் - பாவார்த்த ரத்னாகரம் கூறுவது