வியாஸரின் மகாபாரதம் - விரிவான விளக்கம் பகுதி 2


 மாதா பிதா குரு தெய்வத்திற்கு சமர்ப்பணம்

நாரயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் |

தேவீம் சரஸ்வதீம் வியாசம் ததோ ஜய முதீரயேத் ||



அன்புடையீர்,

ஜெயம் என்ற சொல்லுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அடைவது என்று பொருள். இந்த நான்கையும் பெறும் ஞானத்தைத் தரும் தூல் 'ஜெயம்'. எண் கணிதப்படி ஜெயம் என்ற சொல் 18 என்ற எண்ணைக் குறிக்கும். அஷ்டாதச புராண எண்ணிக்கை இந்த பிரார்த்தனை ஸ்லோகத்தில் பொதிந்துள்ளது.

ஶ்ரீவேத வியாஸ மஹரிஷி அருளிய மகா பாரதத்தினை படிக்க துவங்கும் முன்னர், நாம் இந்த பிரபஞ்சத்தின் கால பிரமாணத்தை அறிந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய அளவிலிருந்து காலம் பின் வருமாறு விரிவடைகிறது.

    18 கண்ணிமை 1 காஷ்டை
    30 காஷ்டை 1 கலை
    15 கலை 1 நாழிகை (தற்போது 24 நிமிடம்)
    2 நாழிகை 1 முகூர்த்தம்
    30 முகூர்த்தம் 1 மனுஷ தினம்
    15 தினங்கள் 1 பட்சம்
    2 பட்சம் 1 மாதம்
    6 மாதம் 1 அயனம்
    2 அயனம் 1 மனுஷ வருடம்
    
365 மனுஷ தினம் 15 நாழிகை 31 விநாடி 15 தற்பரை கொன்டது 1 மானுஷ வருஷம்    

    1 மனுஷ வருடம் தேவர்களுக்கு 1 தினம்

    இதில்   பகற் பொழுது உத்ராயணம் இரவு தட்சனாயணம்

    30 தேவ தினம்                1 தேவ மாதம்
    12 தேவ மாதம்               1 தேவ வருடம்
    12000 தேவ வருடம்       1 சதுர் யுகம் அல்லது 43,20,000 மனுஷ வருடம்

    1 சதுர் யுகம் 4 ஆக கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யகம்,  கலியுகம் என
    விரிந்துள்ளது.
    
    கிருத      யுகம்            4,800 தேவ வருடம்    அல்லது    17,28,000 மனுஷ வருடம்
    திரேதா  யுகம்            3,600 தேவ வருடம்    அல்லது    12,96,000 மனுஷ வருடம்
    துவாபர யுகம்            2,400 தேவ வருடம்    அல்லது      8,64,000 மனுஷ வருடம்
    கலியுகம்                      1,200 தேவ வருடம்    அல்லது      4,32,000 மனுஷ வருடம்

இப்படி 1,000 சதுர் யுகம் பிரம்மாவற்கு 1 பகல் பொழுது ஆகும்

இந்த பகல் பொழுதில் 14 மனுக்கள் அதிகாரம் செய்வார்கள்.

ஒரு மனுவின் அதிகார முடிவான மன்வந்திரங்கள் 71 சதுர் யுகங்கள்.

ஒரு மனுவின் ஆயுள் 71 சதுர் யுகங்கள். 14 மனுக்கள் 71*14=994 சதுர் யுகங்கள்

பிரம்மனின் பகற் கால முடிவில் பூலோக, புவர் லோக, சுவர் லோக 3 லோகங்களும் அழியும்படி தினப் பிரளயம் உண்டாகும். அன்றைய பகற் பொழுது முடிந்ததும் இரவு பிரம்மன் நித்திரை செய்து இரவு முடிந்து எழுந்து மீண்டும் உலகை சிருஷ்டி செய்வார்.



இந்த பகலும் இரவும் சேர்ந்து பிரம்மனுக்கு 1 நாள்

30 நாள் கொன்டது பிரம்மனுக்கு 1 மாதம்
12 மாதம் கொன்டது பிரம்மனுக்கு 1 வருடம்
பிரம்மாவின் ஆயுள் 100 வதுடம்

இந்த 100 வருடம் மஹாவிஷணுவிற்கு 1 நாள்
மஹாவிஷ்ணு 100 வதுடம் ஜீவித்திருப்பார்.

மஹாவிஷ்ணுவின் 100 வருடம் சிவனின் 1 நாள்
பரமசிவன் இப்படி 100 வருடம் ஜீவித்திருப்பார்.

மேற்கண்ட மனுக்கள் முதலானோர், மன்வந்த்ரங்கள் முதலானவை ஶ்ரீவேத வியாஸரின் மகா பாரதத்தில் உலகம் தோன்றிய விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை அடுத்த பாகத்தில் காண்போம்.

இந்த மேலான சரித்திரத்தை எழுத ஆத்ம பலத்தையும் சரீர பலத்தையும் மூல முதற் கடவுளான உச்சிஷ்ட மகா கணபதியும் பரம்பொருளான ஶ்ரீகிருஷ்ணரும் அருள அவர்களிடம் சரணாகதி அடைகின்றேன்.

இதனை எழுதுவதற்கு மானசீகமாக தன்னுடைய ஆசிகளை வழங்கி என்னுடன் எப்பொழுதும் இருக்கின்ற என் குருஜி திருப்பூர் ஶ்ரீ செ. கோபால கிருஷ்ணன் அவர்களின் பாதங்களில் இதனை சமர்ப்பிக்கின்றேன்.


ஆக்கமும் உரிமையும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை, தமிழ்நாடு. இந்தியா.
+91 8838535445/9962859676
veeyes55@yahoo.in





Comments

Popular posts from this blog

ஜோதிட கருத்துக்கள் - பிற ஆசிரியர்கள்

சாணக்யன் கூறும் அறம்

திருமண பாவம் - பாவார்த்த ரத்னாகரம் கூறுவது