ஜோதிடம் - தர்க்க ரீதியான தீர்வு தருகிறது


 ௳

 ஜோதிடம் முக்காலத்தையும் அறிவிக்கும் ஒரு அற்புத கலை. மனித சமுதாயத்தின் தொலைதூர பார்வையை அளவிடும் சான்று. பல வித முறைகள் மூலம் மனிதனின் எதிர்காலத்தைகணிக்கும் கணிணி.

இத்தகைய கலையின் கர்த்தா ஒரு தெய்வக்ஞர். பரமார்த்தர். வியாபாரி அல்ல. இம் மானிட உலகத்தின் ரட்ஷகர். அவர் தனது ஞானத்தினை விற்பதில்லை. ஒரு ஜோதிடரோ அல்லது தெய்வக்ஞரோ காட்டுவது இருட்டில் இருப்போர்க்கு ஒரு வெளிச்சம். பெருமழை வர இருப்பதை சுட்டிக்காட்டி குடை பிடித்துச் செல்லக் கூறும் ஆலோசகர்.

அதனால் தான் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறமனு தாக்கல் நாளைக் கேட்க வருகிறார்கள்.

திருமணப் பொருத்தம், திருமண நாள் முதலியவற்றிற்கு ஆலோசனை பெற ஜோதிடரை அணுகுகிறார்கள்.

குழலினும், யாழினும் இனிய தம் மக்கட் சொல் கேட்கும் காலமறிய விரும்புகிறார்கள்.

தொழில் செய்ய, முதலீடு செய்ய ஆலோசனை கேட்க வருகிறார்கள்.

இதற்கெல்லாம் சிகரமாக இறைவனை கோவிலில் பிரதிஷ்டிக்க, கோவில் கும்பாபிஷேகம் சரியான முகூர்த்தத்தில் வைத்து மூர்த்தியின் அருள் பெற தெய்வக்ஞரை அணுகுகிறார்கள்.

அனைத்து பிரிவினருக்கும் பயன் தரும் இந்த ஜோதிடக் கலை பல பரிமாணங்களை, பிரிவுகளைக் கொன்டுள்ளது.

அஷ்ட மங்கல பிரஸ்னம், சோழி பிரஸ்னம், ஜாமக்கோள் ஆருடம், நாடி ஜோதிடம், பஞ்ச பட்சி, வேத ஜோதிடம், கிருஷ்ண மூர்த்தி பத்ததி, இவை அனைத்தும் ஜோதிட முறைகளே. பிரிவுகளும், பாதைகளும் வேறாக இருந்தாலும் முடிவில் கிடைக்கும் தீர்வு ஒன்றே.

ஜோதிடம் கேட்போரின் பிறந்த நாள், நேரம், ஊர், பாலினம், நோக்கம் இதனை வைத்து ஜாதகம் அல்லது பிரஸ்னம் கணிக்கப்படுகிறது. நடப்பு தசா, புத்தி, அந்தரம், பிறந்த கால கிரக நிலை, கோச்சார கிரக நிலை, ஆருட கிரக நிலை இவைகளை மனதில் கொன்டும், இறைவனின் அருளுடனும், குருவின் ஆசிகளுடனும் ஜோதிடரோ அல்லது தெய்வக்ஞரோ ஜாதகத்துக்குரியவருடைய, கேள்வி கேட்பவரின் கடந்த, தற்கால, எதிர்கால நிகழ்வுகளைக் கூற துவங்குகிறார்.

இங்கு ஜாதகரின், கேள்வி கேட்பவரின் வயது, பாலினம், மனோ நிலை, சூழ் நிலை, கடந்த கால வாழ்க்கை, முதலியன ஜோதிடரால் ஆராயப்பட்டு ஆலேசனை வழங்கப்படுகிறது. எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற முறையில் செயல்படுவதில்லை. 

கால, தேச, வர்த்தமானங்களுக்கு உட்பட்டும், இடம், பொருள், ஏவல் அறிந்தும் ஒரு ஜோதிடரோ, தெய்வக்ஞரோ நடந்து கொள்கிறார். தெளிவான விளக்கங்களும், மறைபொருள் ஆலோசனைகளையும் கூறுகிறார். கூறப்பட்ட விளக்கங்களுக்கான தர்க்க ரீதியான விவரங்களைத் தருகிறார். இதுவரை நடந்ததற்கான நிகழ்வுகளின் காரணங்களையும், இனி நடக்க இருப்பனவற்றின் நன்மை, தீமைகளைக் கூறுகிறார், வரவிருக்கும் தீமைகளைக் குறைத்துக் கொள்ள ஆலோசனைகள், அறிவுரைகளையும் அலட்சியமாக இருக்கும் பட்சத்தில் அதன் பாதிப்புகளையும் குறிப்பிடுகிறார். 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

இது இறைவனைப் பற்றிய வள்ளுவனின் கூற்றாயினும், இஃது ஜோதிடர்க்கும் பொருந்தும். ஜோதிடம், பிரஸ்னம் பார்க்கும் முகூர்த்த நேரம் ஜோதிடரையும், தெய்வக்ஞரையும் வழி நடத்துவது பஞ்ச பூதங்களும், அதனை இயக்கும் இறைவனே.

ஜோதிடத்தைப் போற்றுவோம். 

அனைத்து ஜோதிடர்களுக்கும், தெய்வக்ஞர்களுக்கும் சமர்ப்பணம்.

ஆக்கமும், பதிவும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்

சென்னை

+91 9962859676 (Whatsapp)

+91 8838535445

Email: veeyes55@yahoo.in

Comments

Popular posts from this blog

ஜோதிட கருத்துக்கள் - பிற ஆசிரியர்கள்

சாணக்யன் கூறும் அறம்

திருமண பாவம் - பாவார்த்த ரத்னாகரம் கூறுவது