காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

 காதலும் திருமணமும்

இந்த பிரபஞ்சத்தின் ஆதி காதல் ஜோடிகளான ஆதாமும் ஏவாளும் ‘இது தான் காதலின் விவரணம்’ என்று அர்த்தம் கூற முடியாத ஒன்றை பாதையாக வகுத்து இந்த உலக காதலர்கள் அனைவருக்கும் தந்துள்ளார்கள். ‘எதிர் பாலின ஈர்ப்பு’ எனும் விதியே இதற்கான ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கமாக இருக்கும். கட்டுப்படுத்த இயலாத தொடர்பு, வசியம் இரண்டு உயிருள்ள, உயிரற்ற (ஜடப் பொருட்கள் உட்பட) ஜீவன்களிடையே ஒரு தூன்டுதலை ஏற்படுத்துகிறது.

‘காதல்’ விவரணத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறியதன் காரணம் ‘காதல்’ 1) உடல் ரீதியானது 2) மனம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தது (இறைவனிடம்) என இருவகையாக கொள்ளலாம். ஒரு மனித உடல் தான் இதுவரை காணாத பரவசம், தன்னிடம் அன்பு-அக்கறை காட்டும் பாங்கு, எல்லையற்ற மகிழ்ச்சி தருவது என ஒன்றினை உணரும்போது அதை விட வாழ்க்கையில் சிறந்தது எது? இது ஆன்மீக வாதிககளுக்கும், யோகிகளுக்கும், ஞானிகளுக்கும், தத்துவ வாதிகளுக்கும் பொருந்தும்.




நாம் வாழும் வாழ்க்கையில் நம்முடன் புது ஆத்மாக்கள் உறவுகளாக – கணவன், மனைவி, மகன், மகள் – என்று இணைகிறார்கள். இந்த இணைவினால் நமது வாழ்க்கையின் போக்கு – இருப்போர்/வந்து இணைவோர் -  இருவரின் வாழ்க்கையும் – இன்பமாகவோ – துன்பமாகவோ – மாறுகிறது. திருமணம் என்ற பந்தத்தினால், கணவன்-மனைவி என்ற ஏற்படும் உறவின் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ளவே, ‘ஜாதகப் பொருத்தம் பார்ப்பது’ என்ற வழக்கத்தினை கால, காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

திருமணம் என்பது நமது வாழ்க்கை எனும் பாதையில் ஒரு மைல்கல்-ஒரு திருப்புமுனை – வாழ்வியல் மாற்றங்களையும், தாக்கங்களையும் தருவது.

‘திருமணப் பொருத்தம்’ பார்க்கும்போது ஜோதிடர்கள் பல்வேறு கிரகச் சேர்க்கைகளை கருத்தில் கொண்டு, வாரிசு வாய்ப்பு குறைவாக உள்ள ஒரு ஆண் ஜாதகத்தினை, வலிமையான 5ம் இடத்து அதிபதி உள்ள ஒரு பெண்ணின் ஜாதகத்தை பொருத்துவதன் மூலம் குழந்தைப்பேறு பெற்று தம்பதியினர் மகிழ்வுடன் வாழும் வாழ்க்கையை ஏற்படுத்தித்தந்து புகழ் பெறலாம்.

திருமணமான தம்பதியரின் ஜாதகத்தில், ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் நன்மையான அல்லது தீய பலன்களை, மற்றவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் பெற்ற வலிமை அல்லது பலவீனத்தின் அடிப்படையில் (கோட்சாரத்தில், தசா, பத்தி காலங்களில்) ஏற்படுத்தும் தாக்கங்கள் கூட்டவோ, குறைக்கவோ, வேகப்படுத்தவோ, தாமதப்படுத்தவோ செய்கின்றன.




திருமண காலம்

·       7ம் வீட்டு அதிபதியின் தசா, புத்தி காலங்களில், அவர் சுக்ரனுடன் இணைந்திருக்கும் போது திருமணம் நடைபெறும்.

·       7ம் வீட்டில் அமர்ந்த லக்னாதிபதி, 2ம் வீட்டு அதிபதிகளின் தசா, புத்தி காலம்

·       10ம் வீட்டு அதிபதியின் தசா, புத்தி காலங்கள்.

·       7ம் வீட்டு அதிபதியுடன் நின்ற, இணைந்த கிரகங்களின் தசா, புத்தி காலங்கள்.

·       7ல் அமர்ந்த கிரகங்களின் தசா, புத்தி காலங்கள்.

 

காதல் திருமணம்

திருமண பந்தத்தை 7ம் இடமும், அதன் அதிபதியும், அதில் நின்ற கிரகங்கள் முடிவு செய்யும் போது, அது ஒரு நல்ல காதல் திருமணமாக அமைவதை அதனுடன் இணைந்த 5ம் இடமும், 5ம் இடத்து அதிபதியும் தீர்மானிக்கின்றனர். இத்துடன், சுக்ரனின் பார்வை பெற்ற சூரியனும், சந்திரனும், சேரும்போது, இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த காதல் திருமணமாக போற்றப்படுகிறது.

காதல் திருமணத்திற்கான கிரகச் சேர்க்கைகள்;

·       5ம் வீட்டு அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை, பார்வை, தொடர்பு அல்லது 7ம் வீட்டு அதிபதியுடன் சேர்க்கை, பார்வை, தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

·       சுக்ரன் 7ம் வீட்டு அதிபதி தொடர்பு (சேர்க்கை, பார்வை) பெற்றிருக்க வேண்டும்.

·       5ம், 7ம் வீட்டு அதிபதிகளுடன் லக்னாதிபதி தொடர்பு இருக்க வேண்டும்.

·       7ம் வீட்டு அதிபதியும், 9ம் வீட்டு அதிபதியும் 7ம் வீட்டில் இருக்க வேண்டும்.

·       சந்திரனும், சுக்ரனும் 7ம் வீட்டில் சேர்ந்திருக்க வேண்டும்.

·       சூரியனும், குருவும் 5ம் வீட்டில் சேர்ந்திருக்க வேண்டும்.

·       பாதிக்கப்படாத சுக்ரன் 5ம் வீட்டில் இருக்க வேண்டும்.

 

மேலே சில திருமண கால அமைப்புகளும், அவை காதல் திருமணமாக அமைவதற்கான சில விதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

சாதகமான திருமணங்கள் (காதல் திருமணங்கள் உட்பட) அனைத்தும் பாதகங்களை உள்ளடக்கியவையே. திருமணத்திற்குப்பின் வேலை நிமித்தம் பிரிவு, மன வேற்றுமையால் பிரிவு, விவாகரத்து, பிரிவினை, திருமணத்திற்கு பின் வேறு தொடர்புகள் போன்றவையும், தாமத திருமணம், திருமண வாய்ப்பின்மை, திருமணமின்றி சேர்ந்து வாழ்தல், போன்றவை இங்கு விவாதிக்கப்படவில்லை/ஆராயப்படவில்லை.

கருத்தும் ஆக்கமும்

சேதுமாதவன் வெங்கட்ராவ்

சென்னை

தமிழ்நாடு, இந்தியா

+91 9962959676

ssssethu@gmail.com


Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

Love and Marriage - Astrological views