குடும்பம் - ஜோதிட ஆலோசனை

 குடும்பம்


நாம் தற்போது 21ம் நூற்றாண்டின் 23ம் வருடமான 2023ம் ஆண்டில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். கற்கால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த காலம் மாறி,  இனக் கூட்டம் என்றானது. பின்னர் நீண்ட காலம் கூட்டுக் குடும்பமாக தந்தை, தாய், அவருடன் பிறந்தோர், அவர்களின் குடும்பம் என வாழ்ந்த நிலை கடந்த அரை நூற்றாண்டாக பிரிந்து தனிக் குடும்பமாக – தனித் தனிக் குடும்பமாக மாறிவிட்டது. பாட்டன், முப்பாட்டன், கொள்ளுப்பாட்டன், என்பது இன்று மறந்த, மறைந்த வார்த்தைகளாகிவிட்டன. இன்று குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தை (அதிக பட்சம் இரண்டு குழந்தைகள்) என்று பொருளாகிவிட்டது. இந்த குடும்பமும் திருமணம் என்று வரும்போது, மணமகன், மணமகள், அவர்களது பெற்றோர், திருமண உறவுகள் என்று குடும்பமாகிவிடுகிறது. இந்து சமய தர்மப்படி திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்க ஆரம்பிக்கும் காலம் முதல் ஜோதிடர் அந்த குடும்பத்தின் ஒவ்வோரு நிகழ்விலும் – திருமண பொருத்தம், திருமணம், மணவாழ்க்கை, குழந்தைப்பேறு, அதன் ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு, சொத்து சேர்ப்பது, மீண்டும் சுழற்சியாக, அந்த குழந்தையின் திருமணம் என தொடர்கிறது



இப்போது ஜோதிடம் மிகமிக மதிக்கப்பட்ட அதிக பட்ச விஞ்ஞான வடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜோதிடர் கடவுளோ, தேவதூதனோ அல்ல. கடும் சூறாவளி உங்களை நோக்கி வர இருப்பதையோ, சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், ஒரு குடையினை பாதுகாப்பிற்காக எடுத்துச்செல்ல சொல்லும் ஓர் ஆலோசனையாளர் மட்டுமே. கடலின் அலையினை எதிர்த்து படகு செலுத்தும் ஒரு மீகாமன்.


உங்களின் ஜோதிட ஆலோசனைகளுக்கு நீங்கள் தேர்வு செய்யும் ஜோதிடர் ஒர் உயர் குடியில் பிறந்தவராக, நல்ல குணமிக்கவராக, தன்மையானவராக, ஜோதிட ஞானம் மற்றும் இறை பக்தி உடையவராக, தைரியமாக, தன் வார்த்தைகளை உண்மையாக கூறுபவராக இருக்க வேண்டும். எந்த விதமான தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவராகவும், வானியல், ஜோதிடம், தத்துவம், கால, தேச, வர்த்தமான, யுக, பேதங்களை அறிந்து உரைப்பவராகவும் இருக்க வேண்டும். ஆலோசனை கேட்போரின் கேள்விகளுக்கான பதிலை இறைவனையும், தனக்கு ஜோதிடம் கற்று தந்த குருவினை வணங்கி எந்த விதமான தயக்கமோ, ஒளிவு, மறைவு இன்றி கூறவேண்டும்.

ஜோதிட ஆலோசனை கேட்க வருபவர் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தோ, குறிப்பிட்ட கால அல்லது வாழ்நாள் பலனை கேட்கவோ வரலாம். ஜோதிடர் அவரது கேள்விக்கான விடையை ‘பிரசன்னம்’ மூலமாகவோ, ஜாதகத்தினை தீர ஆராய்ந்தோ பதில் கூறுவார்



ஆக்கமும் பதிவும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை, இந்தியா
+919962859676
ssssethu@gmail.com

Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Uranus, Neptune and Pluto