செல்வம் மற்றும் நிதி - ஜோதிட பார்வையில்

 செல்வம் மற்றும் நிதி

இன்றைய உலகில், செல்வம் என்பது பொருள், மற்றும் பொருள் சார்ந்த (மதிப்பினை உயர்த்தக்கூடிய) குவியல்களை, உதாரணமாக, அசையும், அசையாச் சொத்துகள், ஆள் பலம், உறவினர் மற்றும் நண்பர்கள் கூட்டம், அரசியல் செல்வாக்கு, உறுதியான மனம், யாருக்கும் அடிமையில்லாத வாழ்க்கை என்று முதல்நிலை, இரண்டாம் நிலை, பல்வேறு நிலைப்பாடுகளில் கொன்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. நிதி நிலை என்பது ரொக்கமாக உள்ள பணத்தினையோ, தங்கம் மற்றும் நகைகள், அரசாங்க கடன் பத்திரங்களையும் குறிக்கிறது.



கற்றறிந்த சான்றோர் ஒருவர் பெற்ற கல்வி, ஞானம், ஆராய்ச்சி திறன், உயர் குணம் போன்றவற்றையும் செல்வமாகக் கருதுவர். தற்போதைய நாகரீக உலகில் ‘செல்வ மேலாண்மை’ என்று தனியாக ஒரு குழுமம் அறிவையே மூலதனமாக வைத்து ‘பொருளாதார மேம்பாட்டினை’ உருவாக்கி வருகிறார்கள். இந்த அறிவுச் செல்வத்திற்கு எந்த வரைமுறையும் இல்லை. பகிர்ந்து கொள்வதனால் இந்த செல்வம் வளரவே செய்கிறது. குறைவதில்லை.  நீங்கள் ஜாதக ஆலோசனைகளின் மூலம் உங்களது பொருளாதார நிலைமையை தெரிந்து கொள்ளவும், ஜோதிட கல்வியின் மூலம் ஞானம் எனும் செல்வத்தையும் அடையும் சரியான இடத்தினை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுங்கள்.

‘சொந்தக் காலில் நில்லுங்கள்’ இது வெறும் சாதாரண அறிவுரை அல்ல. ‘ஒருவர் தான் சம்பாதிக்கும் சொத்து தன்னுடைய சொந்த உழைப்பில் இருக்க வேண்டும்’ தான் பெறும் கல்வியும் ஞானமும் தன்னுடைய முயற்சியால், உழைப்பினால், இலக்கு சார்ந்த முனைப்பினால் இருக்க வேண்டும். இதன் பலனையே ஒருவர் முழுமையாக அனுபவிக்க முடியும். முன்னோர் சேர்த்து வைத்த சொத்தினை அனுபவிப்போர் அதனுடன் சேர்ந்த ‘கர்மவினையும்’ அனுபவிக்க நேரிடும். ‘யோகம்’ என்பது அதிர்ஷ்டமும் சந்தோஷமும் அல்ல. அது மூதாதையர்களின், முன்னோர்களின் கர்மவினையையும், அவர்களின் சொத்தை அனுபவிப்பவர்களுக்கு தருகிறது. ஜோதிடத்தில் ஒருவர் நல்ல, சிறந்த, நல்வினைகளை அனுபவிக்க, முக்காலியாக (மூன்று கால்களாக) திரிகோணங்கள் எனப்படும் 1, 5, 9ம் வீடுகளிலும், கேந்திரங்கள் எனப்படும் 1, 4, 7, 10ம் வீடுகளிலும் நல்ல கிரகங்கள் பலமாக அமர்ந்து இருக்க வேண்டும். திரிகோணங்களும், கேந்திரங்களும் சிறந்த தூண்களாக அமைந்து நல்ல வாழ்க்கையை ஜாதகருக்கும், அவரது சந்ததியருக்கும் தரும்.



ஜாதகத்தில் 2ம் இடம் ‘தன பாவத்தை’ செல்வம், கண்பார்வை, கல்வி, பேச்சு, குடும்பம், நல்ல உணவு போன்றவற்றைக் குறிக்கிறது. 2ம் பாவம் அடிப்படைக் கல்வி, அறிவு, நல்ல பழக்க, வழக்கங்கள், ஒழுக்கம் முதலியவற்றைக் குறிக்கிறது.

ஒரு ஜாதகத்தில் லக்னம், 2, மற்றும் 11ம் வீடுகளில் அந்த வீட்டின் அதிபதிகள் அமர்ந்து இருந்தாலோ, 2ம், 11ம் வீட்டு அதிபதிகள் தங்களின் உச்ச வீடுகளிலோ, நண்பர்களின் வீடுகளிலோ, அல்லது 11ம் வீட்டிலோ அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் சிறந்த செல்வமுடையவராகி சுகமாக வாழ்வார்.

ஒருவரது ஜாதகத்தில் 2ம் அதிபதியும் 11ம் அதிபதியும் நண்பர்களாக இருந்து லக்னத்தில் லக்னாதிபதியுடன் அமர்ந்தால் அந்த ஜாதகர் மிகுந்த செல்வம் சேர்ப்பார்.

ஒரு ஜாதகத்தில் 2, 11ம் வீட்டு அதிபதிகள் பரிவர்தனையாகி இருந்தாலோ, இருவரும் சேர்ந்து கேந்திரங்களில் (1, 4, 7, 10 வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ, அந்த ஜாதகர் செல்வந்தராகவும், புகழுடன் பிரபலமானவராகவும் இருப்பார்.

2, 4, 9, மற்றும் 11ம் வீடுகள் பலம் பெற்று இருந்தால் அது ஜாதகரின் கல்வி மற்றும் சீரிய ஆராய்ச்சியாளராக பலம் பெறச்செய்து அவரது வாழ்க்கையை உயர்த்தும்.

2, 4, 9, மற்றும் 11ம் வீடுகளின் அதிபதிகள் பலம் பெற்று லக்னத்தில் அமர்ந்திருந்தால், அவர்களது தசா, புத்தி காலங்களில் ஜாதகர் நிலம், வீடு, மற்றும் சகல சொத்துக்களும் சேர்ப்பார்.



ஆக்கமும் பதிவும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்

சென்னை, இந்தியா

+919962859676

ssssethu@gmail.com

Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Uranus, Neptune and Pluto