திருமண பாவம் - பாவார்த்த ரத்னாகரம் கூறுவது
திருமண பாவம்
௳
ஆச்சார்ய தேவோ பவ; நமஸ்காரம் குருஜி
திருமண பாவம்
தமிழாக்கம்;
‘பாவார்த்த ரத்னாகரம்’
Translation from the Book Ramanujacharya’s Bhavartha
Ratnakara – Translated Text & English commentary by Sri. Chandrashekhar S.
Sharma
This contains the version of Sri. B. v. Raman also.
இவை
இராமானுஜாச்சாரியரின் 7ம் பாவம் பற்றிய 13 வடமொழி (சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள்)
·
7ம் வீட்டு அதிபதியுடன் சுக்ரன் சேர்க்கை பெற்று அசுப கோள்களின்
பார்வை அல்லது சேர்க்கை இல்லாதிருப்பின் ஜாதகனுக்கு ஒரு மனைவி தான்.
இங்கு 7ம் பாவம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சுப
கிரகங்கள் பார்வை, சேர்க்கை இருப்பினும் திருமண பந்தம் நீடித்து இருக்கும் – ஒரு
மனைவியுடன் சிறப்பாக வாழ்வார் என்று கூறுகிறது. பெண்கள் ஜாதகத்தில் கணவன் காரகராக
குரு குறிப்பிடப்பட்டு அவர் 7ம் அதிபதியுடன் சேர்ந்திருப்பது நீடித்த திருமண
வாழ்க்கையை தருகிறது.
·
7ம் வீட்டு அதிபதி, தனது வீட்டில் அசுப கிரகங்களுடன் சேர்ந்தாலும்
அல்லது குடும்ப ஸ்தானமாகிய 2ம் வீட்டில் இருந்தாலும் இரு தாரங்கள் (மனைவிகள்)
அமையும்.
இங்கு, இது ஜாதகரின் குடும்ப பாவமான 2ம் இடத்தை
7ம் இடத்துடன் தொடர்பு படுத்தி, திருமணத்திற்கு பின் திருமண வாழ்வில் பிரிவினை,
விவாகரத்து, மனைவியின் இறப்பு/இழப்பு பற்றி குறிப்பிட்டு அதன் பின் மறுமணத்தை
குறிக்கிறது. பல தார மணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேலை நாடுகளில் முதல் மனைவி
இருக்கும் போதே 2ம் திருமணத்தை சுட்டிக் காட்டுகிறது.
·
சுக்ரன் 11ம் வீட்டிலோ அல்லது கன்னியில் நீசம் பெற்று இருந்தாலும், 7ம்
வீட்டு அதிபதி 6 அல்லது 12ம் வீட்டில் இருந்தாலும் இரு தாரங்கள் உண்டு. இது
களத்திராந்தா(அ)ந்தர யோகம் எனப்படும்.
வலிமை இழந்த சுக்ரன் இரு தார யோகத்தை நீசமாக
இருந்தாலும் 11ல் (6ம் பாவத்திலிருந்து 6ம் இடத்தில்) ஏற்படுத்துகிறார். இதே நிலை
7ம் அதிபதிக்கு 6, 12ல் இருக்கும் போது உண்டாகிறது.
·
லக்னத்தில் அமர்ந்த அசுப (தீய) கோள்கள் களத்திராந்தர யோகத்தை
ஏற்படுத்துகின்றன.
7ம் பாவம் குறிக்கும் திருமண பந்தத்தை லக்னத்தில்
நின்ற அசுப (தீய) கோள்கள் பார்வை செய்யும் என்பதால் அது ஒன்றுக்கு மேற்பட்ட
களத்திரங்களை உண்டாக்குகிறது.
·
செவ்வாய், சுக்ரன், சனி பலமிழந்து 2, 7, 8, 4, 12ம் இடங்களில்
அமர்ந்து இருந்தால் ஜாதகர் இரு களத்திரமுடையவராவார்.
(இங்கு சனிக்கு
பதிலாக சந்திரனும் அதே பலமுள்ளவர்)
பலமிழந்த செவ்வாய் தோஷம் மட்டுமே இரு தார
அமைப்பினை தரும் அமைப்பை இந்த ஸ்லோகம் சனி, சுக்ரன், செவ்வாய் மூவருமே பலமி.ழந்து
இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
லக்னத்தில் அமர்ந்த செவ்வாய் மணமுறிவு, விவாக
ரத்து அல்லது ஜாதகர் தனது கணவன்/மனைவியுடன் வாழமாட்டார் என்பதையும் லக்னத்தில்
அமர்ந்த சூரியன் கணவன் மனைவியை அதிகாரம் செய்பவராகவும், லக்னத்தில் அமர்ந்த சனி
தன்னை விட வயதில் மூத்தவரை திருமணம் செய்து கொள்வார் அல்லது திருமணம் செய்து
கொள்ளாமல் இருப்பார். இத்தகையோருக்கு பலம் வாய்ந்த பாப கிரகங்கள் திருமண முறிவை
ஏற்படுத்துகின்றன.
·
செவ்வாய் 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் ஜாதகருக்கு இரு தார யோகம் உண்டு
(இரண்டு முறை திருமணம்). அதே போல் குரு 2, 7ம் பாவங்களில் நின்றால் ஜாதகர் தாமதமாக
(நீண்ட காலம் கழித்து) இரண்டாம் திருமணம் செய்து கொள்வார் (இரண்டாம் தாரம் உண்டு).
குரு 2ம் வீட்டில் அமர்வது குடும்ப வாழ்க்கையில்
தரும் என்பதும், சுப கிரகமாக இருப்பதால் முதல் மனைவியிடம் கருத்து வேற்றுமை இன்றி
வெகு காலம் கழித்து 2ம் திருமணம் நடக்கும் என்றும் கூறுகிறது.
·
சனி 2ம் வீட்டில் அல்லது இராகு 7ம் வீட்டில் அமர்ந்தால் இரன்டு
திருமணங்கள் நடக்கும்.
இந்த ஸ்லோகத்தில் இராமானாஜுச்சாரியார்
‘த்விகளத்ரம்’ அதாவது இரண்டு மனைவிகள் என்றும் இதற்கு முந்தைய ஸ்லோகத்தில்
குறிப்பிட்டபடி ‘களத்திராந்தர யோகத்தை (ஒரு திருமணம் முடிவுக்கு வந்த பின் 2ம்
திருமணம்) குறிப்பிடவில்லை. இங்கு இராகு சனியைப்போல் செயல் படுவார். சனி தான்
நின்ற பாவத்தை கெடுக்க மாட்டார் என்பதால் இராகு, சனி இருவரும் இரண்டு களத்திரங்கள்
ஒரே நேரத்தில் இருப்பதை சொல்கிறார்கள். இங்கு 7ம் பாவம் மனைவியையும், 2ம் பாவம்
இல்லற துணையையும் (இருவருமே மனைவிகள்) குறிக்கிறது. பராசர முனிவர் வாக்கு படி 7ம்
பாவம் முறைப்படி மணந்த 7ம் காரக உறவான மனைவியையும், 2ம் பாவத்தை ‘தார காரகம்’
என்னும் இல்லற துணையையும் குறிக்கிறது.
‘அமரகோசம்’ என்னும் சம்ஸ்க்ருத ஸ்லோக நூல்
விளக்கத்தின்படி 2ம் இட தாரம் என்பது ‘குடும்பத்தை நிர்வகிப்பவர்’ (பல தார மணம்
வழக்கத்தில் இருந்தபோது) என்ற பொருளில் மனைவியாக அங்கீகரிக்கப்பட்டவராக இருந்தார்.
ஒரு தார மணச்சட்டத்தின் பின் இது முதல் மனைவியுடனான பிரிவினை, விவாகரத்து அல்லது
மரணத்திற்கு பின் மணந்து கொண்ட மனைவியிக் குறிக்கிறது.
2ம் பாவமும் 7ம் பாவமும் பார்வை, சேர்க்கை
பெற்றிருந்தால் ஜாதகர் ஒரே மனைவியை உடையவராவார் (அவரே குடும்பத்தையும்
நிர்வகிப்பவர்).
·
2மிடம், 7மிடம் பாவாதிபதிகள் அல்லது சுக்ரன் அவர்களின் சொந்த
வீடுகளில் அமர்ந்தாலோ அல்லது 2, 7க்கு அதிபதிகள் பரிவர்தனை பெற்று சுக்ரனுடன்
சேர்ந்தாலோ, சுபர்களின் சேர்க்கை, பார்வை பெற்றாலோ பார்க்கப்பட்ட சுப கிரகங்களான
எண்ணிக்கையிலான மனைவிகள் உண்டு. அசுப கிரகங்களின் பார்வை பெற்றால் ஒரு மனைவி
மட்டும் உயிருடன் இருப்பாள்.
7ல் சுக்ரன் அமர்ந்த ஜாதகர் காம உணர்வு அதிகம்
உள்ளவராக இருப்பார். 2ம் பாவமும் 7ம் பாவமும் முதல் மற்றும் 2ம் மனைவியை
குறிக்கின்றன. இரண்டும் சேர்ந்து 7ம் பாவத்தில் இருப்பது இரண்டு மனைவியரைக்
காட்டுகிறது. 7ம் பாவத்தை எத்தனை சுப கிரகங்கள் பார்க்கின்றனவோ அத்தனை மனைவியர்
இருப்பர்.
·
7ல் சுக்ரன், சனி சேர்ந்து இருந்தால் ஜாதகர் மனைவியிடம் மிகுந்த
அன்புடன் இருப்பார்.
·
7ல் புதன் இருந்தால் ஜாதகர் பிறர் மனைவி/கணவரிடம் ஆசை உள்ளவராக
இருப்பார். 7ல் குரு இருந்தால் ஆசையும், பாசமும் மிகுந்த மனைவி அமைவார்.
புதன் அற்பமான,
மாறுபட்ட எண்ணம் உடையவராதலால், வேலை மற்றும் பிற காரணங்களால் மனைவியை/கணவனை
பிரிந்திருக்கும் காலத்தில் சபலத்திற்கு உட்படுவார்.
·
2, 7, 10ம் அதிபதிகள் 4ம் வீட்டில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தன்
மனைவியை விட்டு பிற மாதர்களிடம் காம ஆசை கொண்டவனாக இருப்பான்.
இங்கு 2ம் பாவாதிபதி 7ம் வீட்டிற்கு 8ம்
அதிபதியாகிறார். 7ம் இடம் வாழ்க்கைத்துணையையும், 10ம் இடம் 7ம் வீட்டிற்கு 4ம்
இடமாக அமைவதாலும் 2, 7, 10 ம் அதிபதிகளின் சேர்க்கை பிற மனைவி/கணவன்மாரிடம்
இச்சையை ஏற்படுத்துகிறது. 2, 7 மாரகாதிபதிகள் 10ம் இடத்தை குறிக்கும் மதிப்பினை
அதனுடன் சேரும் போது இழக்கச் செய்யும்.
பெண்கள் ஜாதகத்தில் 4ம் வீட்டில் அமர்ந்த 7ம்
அதிபதியை எந்த கிரகமும் பார்வை, சேர்க்கை இல்லாமல் இருந்தால் திருமணம் இல்லாமல்
இருப்பார்.. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை இருந்தால் திருமணமானாலும்
சேர்ந்திருக்கும் கிரகங்களைப் பொருத்த காரக, பாவ பிரச்னைகள் இருக்கும். 7ம் அதிபதி
மாராகாதிபதியாகவும் இருப்பதால் 4ம் இட சுகங்களை அழிப்பார்.
·
7ல் உள்ள இராகு ஜாதகருக்கு அனைத்து திறமைகளையும் கொண்டிருப்பார். 7ல்
கேது இருந்தால் ஜாதகரின் மனைவி கொடிய குணம் உடையவராக இருப்பார்.
7ல் அமர்ந்த இராகு பிரமாண்டத்தையும். நுட்பமான
ஆனால் எதிர்மறை எண்ணங்களையும், 7ல் அமர்ந்த கேது வலை போன்ற சிக்கல்களையும்
குறிப்பதனால் மேற்கண்டவாறு ஶ்ரீ இராமானுஜாச்சாரியார் தனது ‘பாவார்த்த இரத்னாகரம்’
என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment