ஆன்மீக விவரணங்கள் - ஶ்ரீமத் பாகவத புராணம்

 ஆன்மீக விவரணங்கள்

ஆச்சார்ய தேவோ பவ; நமஸ்காரம் குருஜி
அடியேன் சேதுமாதவன் வெங்கட்ராவ் ஒரு ஜோதிட ஆர்வலன் மற்றும் மாணவன். எனது ஆச்சார்யரும் குருஜியுமான திருப்பூர் திரு கோபாலகிருஷ்ணன் (ஜிகே) அவர்களின் ஆசிகளால் அவர் தமிழில் எழுதிய ஜோதிட நூல்களில் 7 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. 'Ashta Mangala Prasannam, Marriage Matching in Practice, Jupiter and Kethu (Liabilities), Divorce and Separation, Planetary Transit and Dasa Period, Accurate Transit Prediction, Progeny என்ற தலைப்பில் இந்த 7 புத்தகங்களும் Notion Press ல் பதிப்பிடப்பெற்று Amazon, Flipkart, Exotic India, Notion Press வலைத்தளத்தில் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக எழுத்துப் பணியில் இருக்கும் போது ஜோதிடத்திற்காகவும், பிற தலைப்புகளிலும் எனது ssssethu.blogspot.com என்ற வலைத்தளத்தில் அவ்வப்போது எழுதி பதிவிட்டுள்ளேன்.நான் ஜோதிட புத்தகங்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் நிறைய புத்தகங்கள் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. தற்போது இன்னும் சற்று முனைப்பாக ஜோதிடம், ஆன்மீகம், இலக்கியம், சமூகம், தற்போதைய நிகழ்வுகள், மருத்துவம் ஆகிய தலைப்புகளில் நான் படித்தவற்றை இங்கு எழுத உள்ளேன். இதனால் ஒரு சிலர் பயன் பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சியே. இதனை நான் படித்ததை பகிர்ந்துகொள்ளும் எண்ணத்தில் மட்டுமே எழுதுகிறேன்.
இந்த பதிவுகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி, மாறி வெளியாகும்.
இதனை படித்தோரின் கருத்துகளை, விமர்சனங்களை, அதிலும் குறிப்பாக எதிரிடை (criticism) விமர்சனங்களை வரவேற்கிறேன். அது இன்னும் எனது தேடலை முனைப்பாக்கும்.
ஆங்கிலத்தில் இன்று காலை 'Madness and Phobias' என்ற தலைப்பில் ஒரு பதிவிளை இட்டிருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் படித்து பாருங்கள்.
இன்றைய தமிழ் பதிவில் ஶ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து சிறு குறிப்பாக மணித குலம் உருவானது பற்றி எழுதுகிறேன். நன்றி.
ஶ்ரீமத் பாகவத புராணம்
நமது பாரத நாட்டின் பழம் இதிகாச இராமாயண, மகாபாரத, பதினெட்டு புராணங்களை எழுதிய வ்யாஸ மகரிஷியின் சிறந்த படைப்பு 'புராண ரத்னம்ய எனப்படும் 'ஶ்ரீமத் பாகவத புராணமாகும். இராமாயண, மகாபாரத காவியங்கள் தர்மம், அர்த்தம், காமம், பற்றி மட்டுமே குறிப்பிடுகையில் 'ஶ்ரீமத் பாகவத புராணம்' மட்டுமே மோட்சத்தை - இறைவனை-சென்று அடையும் பக்தி மார்கத்தை பரம்பொருளின் 22 நாராயணன் அவதாரங்களில் ஶ்ரீ கிருஷ்ணன் பகவானின் பரிபூர்ண அவதாரமாகும். இதுவே ஶ்ரீமத் பாகவத புராணத்தின் மூலமாயிற்று.
ஶ்ரீமத் பாகவத புராணத்தை முழுமையாக 7 நாட்களில் கேட்டு முடிப்பது அனைத்து பாக்யங்களையும் தரவல்லது.
இந்த மஹா புராணத்தை 7 நாட்களில் நிச்சயமாக மரணிக்க இருந்த பாண்டவர்களின் வம்சத்தில் அபிமன்யுவின் மனைவி கற்பத்தில் ஶ்ரீ கிருஷ்ணரால் காப்பாற்றப்பட்ட 'விஷ்ணுராதன்' என்னும் 'பரீஷித்' மஹாராஜாவிற்கு வ்யாஸரின் புத்திரரான சுகர் மகரிஷி கூறியது.
பகவான் ப்ரமாண்டத்தையே சரீரமாக கொண்டு வ்ராட்புருஷன் என்னும் ஸ்வரூபம் மூலம் சூர்யனை கண்ணாகவும், அக்னியை வாயாகவும், சந்திரனை மனதாகவும், ப்ராம்மண முகமாகவும், க்ஷத்திரியனைப் போன்ற புஜங்களையும், வைஸ்யனை தொடை ரூபமாகவும், சூத்ரனே காலாகவும், யக்ஞம் ஆராதன ரூப கர்மாவாகவும் உலகில் காணும் எல்லா விஷயங்களையும் அவன் அவயவங்களாக இருக்கின்றன.
மானிட தோற்றம்
ப்ரம்ம தேவன் பகவானின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றினான். ப்ரம்மனின் ஸ்தோத்திரத்தால் மனம் மகிழ்ந்து பகவான் ப்ரம்ம தேவனை உலகை சிருஷ்டுக்க சொல்ல அதன்படி ப்ரம்மனும் ஸ்ருஷ்டியை துவங்கினார்.
ப்ரம்மன் தனது உடலையே இரண்டாகப் பிரித்து ஒன்று ஆணாகவும் மற்றொண்று பெண்ணாகவும் தோன்றும்படி செய்தார். ஆணுக்கு ஸ்வாயம்முவமனு என்றும் அவன் மனைவியாக பெண்ணுக்கு சதரூபா என்றும் பெயரானது. அவர்களுக்கு ப்ரியவரதன், உத்தான பாதன் என்ற இரண்டு புதல்வர்களும், ஆஹூதி, தேவஹூதி, ப்ரஸூதி என்ற மூன்று புதல்விகளும் பிறந்தனர். பெண்களை ருசி, கர்தமர், தஷர் என்ற மூவர் மணந்து கொண்டனர். ஸ்வாயம்புவ மனு இவர்கள் மூலம் இன வ்ருத்தியை செய்தான். அவர்களின் சந்ததியாகத் தோன்றியவர்களே மனுஷ்யர்கள். (மனுவின் சந்ததியர்கள்-மனிதர்கள்) இதுவே புராணங்கள் கூறும் மானிட தோற்றத்தின் வரலாறு.
இதன் தொடர்ச்சியாக ப்ரம்மனின் தசவித (10 வகையான) ஸ்ருஷ்டிகள் (ஶ்ரீமத் பாகவத புராணம் ஸ்லோகம் 3-10-13 முதல் 3-10-29 வரை) அடுத்த பதிவில் காண்போம்.
இதனை பொறுமையாக படித்தோர்க்கு நன்றிகள் பல.
தங்களின் விதேயன்,
சேதுமாதவன் வெங்கட்ராவ்

Comments

Popular posts from this blog

Business and Career - An Astrological perspective

காதலும் திருமணமும் - ஜோதிட பார்வை

Love and Marriage - Astrological views