இராமனை உயர்த்திய வாலி

ௐ வாலியின் மான்பும், பெருமையும் இராமாயணத்தில் வாலியை பற்றி ஒரு விளக்கம். இதிகாசங்களிலே சிறந்த இராமாயணத்திலே ஒரு முக்கியமான பாத்திரம் வாலி. அவனை ஶ்ரீராமன் மறைந்திருந்து கொன்றது சரியா? அவன் கொல்லப்பட வேண்டியவனா? இதைப் பற்றி ஓர் விவரணம். நாலு வேதமாம் நவை யிலார் கலி வேலி யன்னதொன் மலையின் மேலுளான் சூலி தன்னருள் துறையின் முற்றினான் வாலி யென்றுளான் வரம்பிலா ற்றலான் நான்கு வேதங்களையும் வேலியாக கொண்டு கிட்கிந்தையை ஆண்டு வருபவன் வாலி. அந்தணர்கள் மட்டுமே வேதம் பயில முடியுமாதலால் வேதம் கற்றவர்கள் ஓதவும் தான் செவியாற்கேட்டு வேத ஞானம் பெற்றவன் வாலி. கற்றலின் கேட்டலே நன்று ‘செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ எனும் குறள் படி வாலி கேள்வி ஞானம் பெற்றதால் ‘கேள்வியின் நாயகன்’ என்று அறியப்படுகிறான். வாலி இந்திரனின் மைந்தன். சூரியனின் தேர்ப்பாகனான அருணண் என்பவன் ஓர் அழகிய பெண்ணாக வடிவெடுத்து இந்திரன் சபைக்கு சென்றான். இந்திரன் அந்த பெண்ணைக் கண்டு காமுற்று கூடினான். அப்போது பிறந்தவன் வாலி. ச...