பக்திக்கோர் இலக்கணம் கண்ணப்ப நாயனார்
பக்திக்கோர் இலக்கணம் கண்ணப்ப நாயனார்
ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி 61ம் ஸ்லோகம் பக்தியைப் பற்றி கூறுகிறது. பக்தியின் உயர்ந்தவன் கண்ணப்பன். பின்னாளில் அவனைத் தடுத்தாட் கொண்ட சிவனாரின் அருளால் கண்ணப்ப நாயனார் என நாமம் கொண்டார்.
மாணிக்கவாசகனார் தனது திருக்கோத்தும்பியில் தன்னையும் திருக் கண்ணப்பரைப் போல் ஆக்கி தன்னை அழைத்துக் கொள்ள இறைவனை வேண்டுகிறார்.
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை 'வா' என்ற வான் கருணை கண்ணப் பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்துபி
சிவன் கண்ணப்பனை தடுத்தாட் கொண்டு 'கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க' என்று பணிக்கிறார்.
கண்ணப்பரின் உள் நிறைந்த அன்பு வழி நடை;
சிரசில் சிவனின் அர்ச்சனைக்கு மலர்.கணம் கண்ணப்ப நாயனார்
நடந்த மிதியடி சிவலிங்கத்திற்கு வழிகாட்டியானது
வாயிலிருந்த உமிழ் நீர் திரிபுரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகியது
சிறிதுண்டு சுவை கண்ட ஊனமது தேவனுக்கு படையலாகிறது
பக்தி எதையும் செய்ய வைத்தது.
அன்பரென்போர் வேடுவனன்றி வேறு யார்?
ஆக்கமும் படைப்பும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
ssssethu@gmail.com
+918838535445
Chennai, Tamilnadu, India
Comments
Post a Comment