அன்பெனும் கவிதை
அன்பெனும் கவிதை
அன்பு அலைகடல் போல் ஆர்ப்பரிக்காது
ஆர்ப்பரிக்கும் அன்பதனில் இல்லை இன்பம்
இன்பமில்லா அன்பது ஆகுமாம் ஈயம்
ஈயமில்லா அன்பில் உண்டோ உயர்வு
உயர்வில்லா அன்பு அது ஊனமாகிடுமே
ஊனமுற்ற அன்பில் உண்டோ எழுமை
எழுமைக்கில்லா அன்பு தாராது ஏற்றம்
ஏற்றமில்லா அன்பது தருமே ஐயம்
ஐயமுற்ற அன்பில் இராதே ஒளி
ஒளியில்லா அன்பது ஓங்கி உயராது
ஓங்கல் இல்லா அன்பிற்கு ஔடதமேது
ஔடதமில்லா அன்பிற்கு முற்றேதுஃ
ஆக்கமும் பதிவும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
+91 8838535445
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ssssethu@gmail.com

Comments
Post a Comment