சிவனருள் என்னும் நீல ஒளி

 



திருமந்திரம் - 77
'மாலாங்க னேயிங்கு நான் வந்த காரணம்
நீலாங்க மேனியன் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சிவாங்க வேதத்தை செப்ப வந்தேனே' 

'சிவாய நமய என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை ஐயனே;

இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்ச பூதங்களுக்கு அடையாளமாக்கி அதனையே இந்த உடலில் ஐக்கியமாக்கி இருக்கிறது பிரபஞ்சம்.

பஞ்ச பூதங்கள்

ஆகாயம் - புருவமத்தி - 'ய' எனும் அட்சரம் - பரந்தவெளி - ஸ்படிக நிறம். காம, க்ரோத, லோப, மோக, மத செயல்களை குறிப்பது.
வாயு - விசுத்தி (கண்டம்) - 'வா' எனும் அட்சரம் - காற்றும் புகையும் - பச்சை மற்றும் ஸ்படிக நிறம் - இருத்தல், நடத்தல், ஓடல், கிடத்தல், நிற்றல் போன்ற செயல்களைக் குறிப்பது.
தேயு (தீ) - அநாகதம் (இருதயம்) - 'சி' எனும் அட்சரம்,  நெருப்பு, சிவப்பு நிறம், - பயம், அகங்காரம், சோம்பல், தூக்கம், மைதுனம் போன்ற செயல்களைக் குறிப்பது.
அப்பு (நீர்) - மணிபூரகம் (நாபி) - 'ம' எனும் அட்சரம், வெள்ளை மற்றும் ஸ்படிக நிறம் - உதிரம், சிறுநீர், மஜ்ஜை, மூளை முதலான உடல் கூறுகள்.
பிருத்திவி - மூலாதாரம் - மலர் - 'ந' எனும் அட்சரம் - பொன்வண்ண நிறம் - தோல், எலும்பு, நரம்பு, தசை, ரோம, முதலான எடல் பாகங்கள்.

ஞானேந்திரியங்கள் - 5

காது  - ஒலிகளைக் கேட்க
தோல் - ஸ்பரிசத்தை உணர
கண் - உருவங்களைப் பார்க்க
நாக்கு - சுவையினை உணர
மூக்கு - வாசனைகளை நுகர

கர்மேந்திரியங்கள் - 5
வாக்கு - வாயால் பேசுதல்
பாணி - உடலால் (மெய்) வேலை செய்தல்
பாதம் - நடத்தல்
உபஸ்தம் - ஆண், பெண் குறிகள் - நீர்த்தாரை, ஆண்/பெண் சம்போகம்
குதம் - மலக்கழிவு

அந்தகரணங்கள் - 4
மனம் - வாயுவின் செயலால் அலைந்து திரியும்
புத்தி - அக்னியின் வடிவாய் ரூப பேதங்களை பிரித்தறியும்
சித்தம் - அப்புவின் கூறாய் புறவிஷயங்களில் நாட்டம்
அகங்காரம் - நான் என்ற எண்ணம்

ஆமாசயங்கள் - 5
ஆமாசயம் - அன்னம், தண்ணீர் பருகும் இடம்
ஜலாசயம் - அன்னம், தண்ணீர் பரிந்து இறங்கும் இடம் - தொண்டை
மலாசயம் - மலம் சேருமிடம்
ஜலஞ்சயாசயம் - மூத்திரம் சேருமிடம்
சுக்கிலாசயம் - விந்து நிறைந்திருக்குமிடம்

ஆதாரங்கள் - 6
மூலாதாரம் - குத்த்துக்கும் குய்யத்துக்கும் மத்தியில் உள்ள திரிகோண ஸ்தானம். அதிபதி - விநாயகர் தேவி - வல்லபை
ஸ்வாதிக்ஷ்டானம் - வீணா தண்டமாகிய முதுகுத்தண்டிற்கு கீழ் பாகத்தில் ஆண்/பெண் குறி உள்ள இடத்தில் உள்ள நாற்கோணஸ்தானம். அதிபதி - பிரம்மா. தேவி - சரஸ்வதி
மணி பூரகம் - நாபி ஸ்தானத்திற்கு மேல் பிறை போன்ற வளைந்த ஸ்தானம். அதிபதி விஷ்ணு. தேவி - மகாலட்சுமி
அனாகதம் - இருதய ஸதானத்தில் உள்ள முக்கோண ஸதானம். அதிபதி - ருத்திரன். தேவி - ருத்திரி
விசுத்தி - இது கண்டத்தில் உள்ளது. அதிபதி - மகேஸ்வரன். தேவி - மகேஸ்வரி
ஆக்ஞா - புருவ மத்தியில் உள்ள திரிகோண உச்ச ஸ்தானம். அதிபதி - சதாசிவன். தேவி - மனோன்மணி

அவஸ்தை - 5
சாக்கிரம் - ல்லாடஸ்தானம்
சொப்பனம் - கண்ட ஸ்தானம்
சுழுப்தி - இருதய ஸ்தானம்
துரியம் - நாபி ஸ்தானம்
துரியாதீதம் - மூலாதார ஸ்தானம்

மண்டலங்கள் - 3
அக்கினி மண்டலம் - மூலாதாரத்தில் இருந்து நாபி வரை
ஆதித்த மண்டலம் - நாபியில் இருந்து கண்டம் வரை
சந்திர மண்டலம் கண்டத்திலிருந்து புருவ மையம் வரை



ஒலியும், ஒளியும்

இந்த பூவுலகம் ஒலி, ஒளி எனும் சப்தம், வெளிச்சம் (Sound and Light) இரண்டில் தான் அடங்கி இருக்கிறது. இறைவனை வழி படும் போது ஜோதி வடிவாகவும், மணி ஓசையிலும் மனம் ஒன்றி தியானிக்கிறது. இதில் ஜாதி, மத வேறுபாடில்லை. இந்து கோவில்களின் பூஜா மணி, தேவாலய மணி ஓசை, முகம்மதியர்களின் தொழுகையின் போது ஓதும் தூஆ அனைத்தும் ஒன்றே.

ஒலியை காதாலும், ஒளியை கண்ணாலும் காண்கிறோம். ஒலியால் அடையும் நெறி கர ராஜ வைரீரந்திரத் தியானம் ஆகும்.

இரண்டு காதுகளையும் அடைத்துக்கொண்டு அங்கு காது நரம்புகளின் ஓசை எழச் செய்து பழகினால் சாதனையால் மனம் சில மாதங்களில் ஒரு நிலைப்பட்டு விடும். காதில் நாதம் விழும் போது மனம் அடங்கி விடும்.

இதனையே நாம் ஓங்கார ரூபமான விநாயகரை காணும்போது செய்கிறோம்.

சப்தப் பிரம்ம ஞானம் என்பது இடியின் ஓசைக்கு தன் மனத்தை ஒடுக்கி இறைவனை தியானிப்பவன் அந்த சர்வேசுவரனிடம் சரண்டைந்தவனாகி மிருத்யுஞ்சய சரீரத்தை அடைகிறான்.

இந்தச் சப்தத்தில் கோஷம், காம்ஸ்யம், கொம்பு, கண்டாமணி, வீணை, புல்லாங்குழல், துந்துபி, சங்கம், மேக கர்ஜனை போன்ற ஒன்பது வகை உள்ளது.
இதை நாதானு சந்தானம் என்பார்கள்.




ஜோதி வழியாக இறைவனை காண்பது ஒளி முறையாகும்.

ஒலியோ, ஒளியோ இரண்டும் ஒன்றை ஒன்று தழுவி நிற்கும். 

ஔவையார் விநாயகர் அகவலில் 'நெஞ்சிற்குடி கொண்ட நீலமேனிய என்று அகக் கண்களால் காண முடியாத நீல ஒளியை இங்கு கூறுகிறார். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் நீல ஒளி உள்ளது. இதுவே ஜீவனின் இருப்பிடம். முகத்தின் முன் காணும் நீல ஒளி குண்டலினி சக்தியின் நிலை - அருட் சக்தி.

அகவே ஆசாபாசங்களை விட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி புருவ மத்தியில் எண்ணத்தை நிறுத்தி வைக்கும்போது நீல ஒளி தெரிகிறது. பின் மூளையில் உள்ள ஒரு சக்தியும் (Pineal Gland) , முன் மூளையில் உள்ள ஆற்றலும் (Pituitrin Gland) இந்த இரண்டும் சேர்ந்துதான் இந்த நீல ஒளியினை உண்டாக்குகிறது.

இதை தென்னாட்டுக்கு அளிக்கவே தாம் இங்கு வந்ததாக திருமூலர் கூறுகிறார்.

இந்த ஒளியைத் தரிசித்தவர்கள் சிவ யோகிகளாவர். அண்ட ஒளி என்பது சிவமயமாகும். நீல ஒளி என்பது சக்தியாகும்.

இறைவன் இன்ப வடிவானவன். அவனது சத்-சித்-ஆனந்த நிலை அறிந்து அவனுடன் இணைந்தவர்கள் ஆசாபாசங்கள் நீங்கி உடலில்லா அறிவுருவாகின்றனர்.

சர்வம் சிவமயம்

ஆக்கமும் வடிவும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை 73 தமிழ்நாடு. இந்தியா
+918838535445/+919962859676
ssssethu@gmail.com

Comments

Popular posts from this blog

நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்

கம்பன் கூற்றில் இராமன் என்னும் மனிதன்