Posts

Showing posts from October, 2025

தமிழ் இசை மும்மூர்த்திகள்

Image
  தமிழ் இசை மும்மூர்த்திகள் இசை உலகில் சங்கீத மும்மூர்த்திகள் என அறியப்பட்டவர்கள் தியாகராஜர் , சியாமா சாஸ்திரிகள் , முத்துசாமி தீட்சிதர் ஆவர் . இது போலவே தமிழ் இசையின் மும்மூர்த்திகளென தமிழகம் போற்றும் புகழுடையவர்கள் திருமிகு சான்றோர் முத்துத்தாண்டவர் , மாரிமுத்தா பிள்ளை , அருணாசலக் கவிராயர் எனும் மூவர் . தேனினும் இனிய தமிழை கர்நாடக சங்கீத ராகங்களில் மிக நேர்த்தியாக பாடியவர்கள் இவர்கள். மார்கழி மாத சங்கீத சபாக்களில் இவர்களில் பாடல்கள் இடம் பெறாமல் இராது. ஆனால் சற்றே வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் மற்ற பாடல்களை ஒப்பிடும் போது இவை குறைவாகவே இருப்பதுதான் . இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் , பழம் பாடகர்கர்களான , திருமதி சுப்புலக்ஷ்மி , டி கே பட்டம்மாள் , ஜி என் பி , போன்றோருக்கு பின் தமிழிசை மும்மூர்த்திகளின் எத்துணை பாடல்கள் உயிரோட்டமாக இருக்கிறது என்பதே ஒரு கேள்விக்குறி ? 1. ஏன் பள்ளி கொண்டீர் ஜயா 2. யாரோ இவர் யாரோ 3. எனக்குன் இரு பதம் என்பதே திரும்ப திரும்ப ஒலிக்கின்றது . முத்துத் தாண்டவரின் பவ பிரியா அல்லது பவானி என்ற ராகத்தில் அமைந்த ' பூலோக கிரி கைலாச கிரி சித...

பக்திக்கோர் இலக்கணம் கண்ணப்ப நாயனார்

Image
  பக்திக்கோர் இலக்கணம் கண்ணப்ப நாயனார் ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி 61ம் ஸ்லோகம் பக்தியைப் பற்றி கூறுகிறது. பக்தியின் உயர்ந்தவன் கண்ணப்பன். பின்னாளில் அவனைத் தடுத்தாட் கொண்ட சிவனாரின் அருளால் கண்ணப்ப நாயனார் என நாமம் கொண்டார். மாணிக்கவாசகனார் தனது திருக்கோத்தும்பியில் தன்னையும் திருக் கண்ணப்பரைப் போல் ஆக்கி தன்னை அழைத்துக் கொள்ள இறைவனை வேண்டுகிறார். கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை 'வா' என்ற வான் கருணை கண்ணப் பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்துபி சிவன் கண்ணப்பனை தடுத்தாட் கொண்டு 'கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க' என்று பணிக்கிறார். கண்ணப்பரின் உள் நிறைந்த அன்பு வழி நடை; சிரசில் சிவனின் அர்ச்சனைக்கு மலர்.கணம் கண்ணப்ப நாயனார் நடந்த மிதியடி சிவலிங்கத்திற்கு வழிகாட்டியானது வாயிலிருந்த உமிழ் நீர் திரிபுரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகியது சிறிதுண்டு சுவை கண்ட ஊனமது தேவனுக்கு படையலாகிறது பக்தி எதையும் செய்ய வைத்தது. அன்பரென்போர் வேடுவனன்றி வேறு யார்? ஆக்கமும் படைப்பும்; சேதுமாதவன் வெங்கட்ராவ் ssssethu@gmai...