வைணவ சம்ப்ரதாயம் - ஶ்ரீசடாரி சாதித்தல்

 வைணவ சம்ப்ரதாயம் - ஶ்ரீசடாரி சாதித்தல்









விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்ட திரு. ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் எழுதிய
'ஹிந்து மதத்தில் சில.. ஏன், எதற்காக என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புகள்.


ப்ரும்ம வைவர்த்த புராணம் கூறுவது;
ஸ்நானம் தானம் தபோ ஹோமோ
தேவதா பித்ரு கர்ம சI
தத்ஸர்வம் நிஷ்பலம் யாதி
ல்லாட திலகம் வினாII
நெற்றியில் திலகம் இடாமல் செய்யப்படும் தியானம், தானம், தவம், ஹோம்ம், தேவ பித்ரு கார்யங்கள் யாவும் பயன்ற்றவை ஆகும்.
ஆகவே நாம் நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஜாதி அடையாளம் அல்ல. அது சமய சின்னம் ஆகும்.
நெற்றியில் புருவ மத்தியில் மூளையின் முன்புறத்தில் பீனியல் க்ளாண்டு என்ற ஒரு சுரப்பி எள்ளது. ஆக்ஞா சக்ரம் அல்லது மூன்றாம் கண் எனும் இதை உயிர்ப்பிக்கவே பல்வேறு பொருட்கள் திலகமாக இடப்படுகின்றன. நெற்றியில் அணியும் திலகம் நெற்றியைக் குளிர வைத்து உடல் உபாதையிலிருந்து நம்மைக் காக்கிறது.
பொருட்களின் விஞ்ஞான கூற்றின் படி, சந்தனம் குளிர்ச்சியையும், விபூதி சர்மத்தை சுத்தி செய்தும், குங்குமம் மற்றும் மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்தும் நம்மைக் காக்கின்றன.
பெருமாளின் திருவடியைச் சூடுவதாக எண்ணியே ஶ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் காப்பு அணிகின்றனர்.
பெருமாளின் திருவடிகளைத் தலையில் பதிப்பதாக பாவித்தே பெருமாள் கோவில்களில் ஶ்ரீசடாரி சாதி(த்)தப்படுகிறது.
வேதாந்த தேசிகர் 'பாதுகா ஸஹஸ்ரம்' என்னும் ஒரு க்ரந்தத்தை பெருமாளின் பாதுகைகளுக்கு உள்ள மகிமையைப்பற்றி எழுதி உள்ளார்.
ஶ்ரீசடாரியை சிரஸில் ஸாதித்துக் கொண்டால் மட்டுமே அந்தந்த ஆந்நிதிகளில் வழிபாடு பூர்த்தி அடைந்ததாக கருதப்படுகிறது.
ஶ்ரீசடாரியை தொட்டு எடுத்து ஸாதிக்கும் அதிகாரம் பெற்ற பட்டாச்சார்யார் மட்டுமே ஶ்ரீசடாரி சாதிக்க முடியும்.



பகவானின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே ஶ்ரீசடாரி. சடம் என்பது ஒரு வகை காற்று. இந்த காற்றின் ஸ்பரிசத்தால் அஞ்ஞானம் மேலெழும். இதனை போக்கும் சத்துருவே ஶ்ரீசடாரி எனும் ஹரி.
அஞ்ஞானத்தை போக்கும் பாடல்களை அருளிய நம்மாழ்வாருக்கும் சடாரி என்னும் பொருள் கொண்ட சடகோபன் நாமமாகும்.
பகவானுடைய திருவடிகளில் நம்மை சேர்க்கவே நம்மாழ்வார் பாசுரங்களை அருளினார். ஆகவே நம்மாழ்வார் வடிவமாகவே ஶ்ரீசடாரி சாதிக்கப்படுகிறது.
ஶ்ரீசடாரி என்ற பெயரில் உள்ள 'ஶ்ரீ' தாயாரை குறிக்கிறது.
ஶ்ரீசடாரியை சாதிக்கும் போது பெருமாள், தாயார் இருவரது பாதுகைகளையும் சிரஸில் தரிக்கும் பாக்கியம் கிடைக்கிறது.
ஶ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே'

சேதுமாதவன் வெங்கட்ராவ்

Comments

Popular posts from this blog

MUNDANE ASTROLOGY - A Few Hints

சிவனருள் என்னும் நீல ஒளி

Cause of Death - Medico and Astro Analysis